இன்று தமிழக சட்டப்பேரவையில் 2026-2027 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இந்த நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்தார். இது வழக்கமான முழு பட்ஜெட் இல்லை, ஏனென்றால் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால், தற்போதைய அரசு குறுகிய கால செலவுகளை மட்டுமே கவனத்தில் கொண்டு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது.
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48, முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழக அரசு மருத்துவத்துறையை எப்போதும் மிக முக்கியமான துறையாகக் கருதி வருகிறது.

மக்களின் உயிர், உடல் நலம் பாதுகாப்பதில் இத்துறைக்கு முன்னுரிமை கொடுப்பது திமுக அரசின் தொடர்ச்சியான கொள்கையாக இருந்து வருகிறது. குறிப்பாக, ஏழை எளிய மக்களுக்கு இலவச சிகிச்சை, தரமான மருத்துவ வசதிகள், தடுப்பூசி, புற்றுநோய் போன்ற நோய்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தும் திட்டங்கள் மூலம் இத்துறை தொடர்ந்து வலுப்படுத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: சிறப்பு செயலாக்க திட்டங்களுக்கு ரூ.17 கோடி...! பேரவையில் அடுத்தடுத்து வெளியான தரமான அறிவிப்புகள்..!
சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு 22,090 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தில் 6374 கோடியில் பலன் கிடைத்துள்ளதாக தெரிவித்தார். புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிவதற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக கூறியுள்ளார்.
இதையும் படிங்க: விளையாட்டுத்துறைக்கு ரூ.718 கோடி ஒதுக்கீடு..! இடைக்கால பட்ஜெட்டில் சிறப்பு கவனம்..!!