ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் கடந்த 6-ந்தேதி நள்ளிரவில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தியது. ஜெய்ஷ் இ முகமது தலைவன் மசூத் அசார் குடும்பத்தினர் உட்பட 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதனால் காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தியது. காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் மக்கள் வசிக்கும் இடங்களிலும் ஏவுகணைகள், ட்ரோன்களை வீசியது. ஆனால், பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சியை ஏவுகணை பாதுகாப்பு கவச வாகனம் மூலம் இந்தியா முறியடித்தது.
இதையும் படிங்க: பூதாகரமாகும் ட்ரம்ப் மத்தியஸ்தம்.. சிக்கலில் பிரதமர் மோடி.. காங்கிரஸ் கையில் எடுக்கும் அடுத்த அஸ்திரம்..!

பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும் வகையில் இந்திய ராணுவம் லாகூர், கராச்சி நகரங்களில் ட்ரோன் தாக்குதலை நடத்தியது. இதனால் இரு நாடுகளிடையே தீவிர போர் மூளுமோ என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 10ம் தேதி மாலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இந்தியாவும் பாகிஸ்தானும் தாக்குதலை நிறுத்த சம்மதம் தெரிவித்ததாக கூறினார்.

அவரது அறிவிப்பு வெளியான சிறிது நேரத்தில் இருதரப்பு சண்டை நிறுத்தத்தை இந்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரியும் உறுதி செய்தார். அன்று மாலை 5 மணியில் இருந்து தாக்குதல் நிறுத்தம் அமலானது. இதனை தொடர்ந்து ஆப்பரேஷன் சிந்துார் குறித்து நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, அமெரிக்காவின் மத்தியஸ்த நடவடிக்கையால் அணு ஆயுத போர் தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், போரை நிறுத்தாவிட்டால் இந்தியா-பாக்., உடனான வர்த்தகத்துக்கு தடை விதிக்கப்படும் என கூறியதை அடுத்து, போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தற்காலிகமாகவே நிறுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி கூறியிருந்தார். இந்நிலையில், பிரதமர் மோடி பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்திய ராணுவத்தின் 'ஆபரேஷன் சிந்தூர்' தொடர்பாக ஆலோசனை நடைபெறுகிறது. கூட்டத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் பங்கேற்று உள்ளனர்.

கூட்டத்தில் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை, பாதுகாப்பு விவகாரங்கள், இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்த உடன்பாடு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. ராணுவத்தின் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்தியா-பாகிஸ்தான் விவகாரம் தொடர்பான கொள்கை முடிவுகள், பொருளாதார தடைகள், ராணுவ நடவடிக்கைகள் ஆகியவை தொடர்பாகவும் விவாதிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை தற்காலிகமாகவே நிறுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறியிருந்த நிலையில் இந்த அமைச்சரவை கூட்டம் நடைபெறுவது முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: Operation Sindoor.. இந்திய ராணுவம் செய்த சம்பவம்.. மனதார பாராட்டிய ரஜினிகாந்த்..!