• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, November 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கூகுள் மேப் தகவல்களை வைத்து பத்திரப் பதிவு செய்ய முடியுமா? தெளிவுபடுத்திய பதிவுத்துறை!

    இந்த நடைமுறை 2023 அக்டோபர் 1 முதல் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் பின்பற்றப்பட வேண்டும்.
    Author By Shanthi M. Thu, 29 Oct 2026 14:52:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    can-google-maps-data-used-for-property-registration-clarification-from-registration-dept

    சொத்து பத்திரப்பதிவு செய்யும்போது நிலத்தின் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு எல்லைகளைக் குறிப்பிடாமல், கூகுள் மேப் அல்லது ஜி.பி.எஸ். விவரங்களை மட்டும் பயன்படுத்தி பதிவு செய்யலாமா என்ற சந்தேகம் பலருக்கு உண்டு. இது தொடர்பாக புதுச்சேரியைச் சேர்ந்த ஜெயகாந்தன் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பதிவுத்துறையிடம் கேள்வி எழுப்பியிருந்தார். நான்கு புற எல்லைகள் குறித்த விதிகள், சட்டப்பிரிவுகள் மற்றும் ஸ்டார் 3.0 திட்டத்தில் ஜி.ஐ.எஸ். வரைபடம் எல்லைகளுக்கு மாற்றாக பயன்படுத்தப்படுமா என்பதையும் அவர் வினவியிருந்தார்.

    பதிவுத்துறை அளித்த பதிலில், 2023 செப்டம்பர் 26 அன்று வெளியிடப்பட்ட சுற்றறிக்கை நகல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, பத்திர ஆவணத்தில் சொத்தின் புவியியல் ஆயத்தொலைவுகள் (அட்சரேகை, தீர்க்கரேகை) உடன் நிலத்தின் புகைப்படத்தையும் இணைக்க வேண்டும். அந்த புகைப்படத்தை ஏ4 தாளில் அச்சிட்டு ஆவணத்தின் ஒரு பகுதியாக சேர்த்து பக்க எண்ணைக் குறிப்பிட வேண்டும். விற்பவர் மற்றும் வாங்குபவர் அதில் கையொப்பமிட வேண்டும். இந்த நடைமுறை 2023 அக்டோபர் 1 முதல் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் பின்பற்றப்பட வேண்டும்.

    இருப்பினும், நான்கு புற எல்லைகளை முழுமையாக தவிர்த்து GPS அல்லது கூகுள் மேப் மட்டும் போதுமானதா என்ற நேரடி கேள்விக்கு பதிவுத்துறை தெளிவான அனுமதி அளிக்கவில்லை. ஏனெனில் GPS மூலம் நிலத்தின் இருப்பிடத்தை துல்லியமாகக் கண்டறிய முடியும் என்றாலும், அது சட்டப்பூர்வ எல்லைகள், பரப்பளவு அல்லது உரிமை விவரங்களை உறுதிப்படுத்தாது. சர்வே எண், உட்பிரிவு எண், பரப்பளவுடன் GPS இருப்பிடத்தை மட்டும் குறிப்பிட்டு எல்லைகளை விட்டுவிடுவதற்கு அரசு எந்த அனுமதியும் வழங்கவில்லை.

    இதையும் படிங்க: ஒரே நாளில் வேலை..! மாற்றுத்திறனாளியின் கோரிக்கை..! சட்டென நிறைவேற்றிய CM விஜய்..!

    google map

    தமிழ்நாட்டில் 2023 அக்டோபர் முதல் அறிமுகப்படுத்தப்பட்ட புகைப்படம் மற்றும் ஜியோ-கோஆர்டினேட்ஸ் இணைப்பு முறை, எல்லைகளுக்கு மாற்றாக அல்ல, கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கையாகவே செயல்படுகிறது. இது போலி ஆவணங்கள் மற்றும் தவறான இடங்களில் பதிவு செய்வதைத் தடுக்க உதவுகிறது. ஸ்டார் 3.0 திட்டத்தில் ஜி.ஐ.எஸ். தொழில்நுட்பம் ஒருங்கிணைக்கப்பட்டு வருவதாலும், நில அளவையில் டிஜிபிஎஸ் போன்ற முறைகள் விரிவுபடுத்தப்பட்டு வருவதாலும் எதிர்காலத்தில் எல்லை விவரங்கள் மேலும் துல்லியமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போதைய விதிகளின்படி நான்கு புற எல்லைகள் கட்டாயமாகும்.

    2020 முதல் 2026 ஆகஸ்ட் வரை எல்லைகள் சரியாகக் குறிப்பிடப்படாமல் பதிவு செய்யப்பட்ட புகார்கள் குறித்து விவரங்கள் கேட்கப்பட்டாலும், அவை பதிவேடுகளில் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே யாரேனும் GPS மட்டும் போதும் எனக் கூறினால் நம்ப வேண்டாம். சரியான எல்லை விவரங்களுடன் ஆவணங்களை தயாரிப்பதே பாதுகாப்பானது.
     
    இதையும் படிங்க: ரூ.3 கோடிக்கு தங்க நெக்லஸா? ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்கவில்லை! அமைச்சர் கீர்த்தனா ஆதங்கம்!

    மேலும் படிங்க
    அரசியல் பேச்சுகளுக்கு கைது நடவடிக்கையைப் பயன்படுத்தக் கூடாது: சென்னை உயர் நீதிமன்றம் கண்டிப்பு!

    அரசியல் பேச்சுகளுக்கு கைது நடவடிக்கையைப் பயன்படுத்தக் கூடாது: சென்னை உயர் நீதிமன்றம் கண்டிப்பு!

    தமிழ்நாடு
    தவெகவுக்கு ஆட்சி நடத்த அருகதை இல்லை – தமிழக அரசை கடுமையாக விமர்சித்த பாஜக வெங்கடேசன்!

    தவெகவுக்கு ஆட்சி நடத்த அருகதை இல்லை – தமிழக அரசை கடுமையாக விமர்சித்த பாஜக வெங்கடேசன்!

    அரசியல்
    திமுக அதிமுக எக்காலத்திலும் இணையாது: தவெக பரப்பிய வதந்தி என ரகுபதி கடும் சாடல்!

    திமுக அதிமுக எக்காலத்திலும் இணையாது: தவெக பரப்பிய வதந்தி என ரகுபதி கடும் சாடல்!

    தமிழ்நாடு
    ரஷ்ய போரில் 11 நாட்கள் சிறைவாசம்: மதுரை மாணவி டெய்சியை மீட்ட சு.வெங்கடேசன் எம்பி!

    ரஷ்ய போரில் 11 நாட்கள் சிறைவாசம்: மதுரை மாணவி டெய்சியை மீட்ட சு.வெங்கடேசன் எம்பி!

    தமிழ்நாடு
    சூலூர் சிறுமி கொலை வழக்கு: நவம்பர் 16-ல் தீர்ப்பு; கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் அறிவிப்பு!

    சூலூர் சிறுமி கொலை வழக்கு: நவம்பர் 16-ல் தீர்ப்பு; கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    மெட்ரோவுக்கு போக இனி ஆட்டோ தேவையில்லை! போரூரில் சென்னை மெட்ரோவின் அசத்தல் இணைப்பு சேவை!

    மெட்ரோவுக்கு போக இனி ஆட்டோ தேவையில்லை! போரூரில் சென்னை மெட்ரோவின் அசத்தல் இணைப்பு சேவை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share