டெல்லி செங்கோட்டை அருகே கார் குண்டுவெடிப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியில் உள்ள செங்கோட்டை அருகே ஒரு பெரிய குண்டு வெடிப்பு ஏற்பட்டது. செங்கோட்டை அருகே ஒரு காரில் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. செங்கோட்டை மெட்ரோ நிலையத்தின் கேட் எண் 1-ல் இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது.

கார் குண்டு வெடித்ததை அடுத்து மக்கள் திடீரென பீதியடைந்தனர். இந்த வெடிப்பில் இரண்டு அல்லது மூன்று பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த மிகப்பெரிய குண்டு வெடிப்பு காரணமாக, கார் தீப்பிடித்து எரிந்ததுடன், அருகில் இருந்த இரண்டு, மூன்று வாகனங்களும் தீக்கிரையாகின.
இதையும் படிங்க: திமுகவை வீழ்த்த விஜய்க்கு என்ன பலம் இருக்கு? - நறுக் கேள்வி கேட்ட வானதி சீனிவாசன்...!
இந்த வெடிப்பின் தாக்கத்தால் அருகில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்தன. உண்மையில், வெடிப்பு நடந்த நேரத்தில் அங்கு ஏராளமான மக்கள் இருந்த நிலையில், உயிரிழப்பு மற்றும் காயமடைந்தவர்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
இதையும் படிங்க: "உங்க அப்பா - மகன் சண்டைக்கு என்னை குறை சொல்றது நல்லா இல்ல" - அன்புமணியை எச்சரித்த ஜி.கே.மணி...!