தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, எ.வ வேலு, சிவசங்கர் ஆகியோர் மோசடி, ஊழல் வழக்குகளில் விசாரணை வளையத்தில் உள்ள நிலையில், தா.மோ.அன்பரசன் மீதும் நில அபகரிப்பு புகாரின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது வாடகைக்கு பெற்ற இடத்தை அபகரிக்க முயற்சி செய்ததாக திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ அன்பரசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 6 மாத காலத்திற்கு வாடகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலத்தை திருப்பி வழங்கவில்லை என புகார் அளிக்கப்பட்டது. ஜேஷ் என்பவர் அளித்த புகாரின் பேரில் பரங்கிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
முதல்வர் தனிப்பிரிவில் சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவன உரிமையாளர் ராஜேஷ் சோமசுந்தரம் என்பவர் அளித்த புகாரில் தெரிவித்து இருப்பவதாவது:-
இதையும் படிங்க: #BREAKING கரிசல் எழுத்தாளருக்காக கலங்கிய சி.எம்.... வேதனையுடன் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட விஜய்...!
பரங்கிமலையில் 2024ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலின் போது தேர்தல் பணிமனைக்காக கொடுத்த இடத்தை 5500 சதுர அடி நிலத்தை திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் திருப்பி தர மறுக்கிறார்.அன்பரசனின் உதவியாளர் என்ற பெயரில் ஒருவர் வந்து கேட்டதன் பேரில் அந்த இடம் தரப்பட்டது. இதற்கென கட்டாயப்படுத்தி 6 மாத குத்தகை ஒப்பந்தமும் ஏற்படுத்தினர். ஆனால், குத்தகை காலம் முடிந்தும் இடத்தை காலி செய்து தரவில்லை. 2 ஆண்டுகளாக வாடகையும் தரவில்லை.
குத்தகை ஒப்பந்தம் சிலரது பெயரில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது, அவர்கள் போலியாக முகவரி கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது. தற்போது சட்டவிரோதமாக என்னுடைய நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர். வாடகை கூட தராமல் இழுத்தடிக்கப்பட்ட நிலையில், கடந்த ஜூன் 19ம் தேதி முன்னாள் அமைச்சர் அன்பரசன் என்னை சந்தித்தார்.
அப்போது, ஒருவாரத்தில் அந்த நிலத்தை தன்னிடம் ஒப்படைக்குமாறும், பணம் கொடுத்து விடுவதாகவும் கூறினார். ஆனால் நிலத்தை விற்க எனக்கு விருப்பமில்லை. எனக்கு அந்த நிலம் தேவைப்படுகிறது என்று உறுதியாக தெரிவித்து விட்டேன். ஒரு வாரம் கழித்து பேசுவதாக கூறிச் சென்றவர், பிறகு எந்த பதிலும் கூறவில்லை. பல முறை தொடர்பு கொள்ள முயற்சித்தும், தொடர்பு கொள்ள முடியவில்லை. எனது நிலத்தை மீட்டுத்தர வேண்டும்.
இவ்வாறு அந்தப் புகாரில் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: நாளை சொந்த தொகுதி செல்கிறார் முதல்வர் விஜய்!! ‘மக்கள் சேவை தளம்’ செயலி அறிமுகம்! 3 நாளில் தீர்வு உறுதி!