தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த சில வாரங்களாக அரசியல் மற்றும் நிர்வாக செயல்பாடுகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். இந்நிலையில் நேற்று காலை நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது ஏற்பட்ட தலைச்சுற்றல் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் மு.க.ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டப் பிறகு, அப்போலோ மருத்துவமனை, "நடைபயிற்சி சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு லேசான மயக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தேவையான பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன” என முதற்கட்டத்தகவலை வெளியிட்டது.
மருத்துவ நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வுகளுக்குப் பிறகு, அவருக்கு உடல் சோர்வு மற்றும் வேலை அழுத்தம் காரணமாக, மூன்று நாட்கள் முழுமையான ஓய்வை மேற்கொள்ள பரிந்துரை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், "லேசான மயக்கம் காரணமாக அப்போலோ மருத்துவமனையில் இன்று ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டார்.அவர் மேலும் மூன்று நாட்களுக்கு மருத்துவமனையில் ஓய்வில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறார். அவருக்கு இன்னும் சில பரிசோதனைகள் செய்யவும் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது," எனக்குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்... பூரண உடல்நலம் பெற இபிஎஸ் பிரார்த்தனை...!
இன்று காலை அதாவது சற்று முன்னதாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை தேனாம்பேட்டையில் இருக்கக்கூடிய அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சில மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பிறகு மீண்டும் தேனாம்பேட்டை அப்போலோ மருத்துவமனையில் இருந்து கிரீம்ஸ்சாலை அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுவார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: மருத்துவமனையில் முதல்வர் மு.க ஸ்டாலின்.. ஃபோனில் நலம் விசாரித்த நடிகர் ரஜினிகாந்த்..!