தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் பதவிபிரமாணம் செய்து வைத்தார். நேற்று முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்ற நிலையில் எம்எல்ஏக்கள் பதவியேற்று கொண்டனர்.
சட்டப்பேரவை நிறைவடைந்த நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார். முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீன், காங்கிரஸ் கட்சியை நிர்வாகிகள் உள்ளிட்டோரை முதல்வர் விஜய் தொடர்ந்து சந்தித்து வருகிறார். இந்த நிலையில் கடைசி நேரத்தில் தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைவதற்கு கை கொடுத்த திருமாவளவனை சந்தித்து முதல்வர் விஜய் வாழ்த்து பெற்றுள்ளார்.

சென்னை வேளச்சேரியில் உள்ள விசிக தலைவர் திருமாவளவன் இல்லத்திற்கு சென்று அவரை முதல்வர் விஜய் சந்தித்துள்ளார். முதல்வர் விஜய் வருவதை அறிந்து வாசலில் காத்திருந்து பூங்கொத்து கொடுத்து திருமாவளவன் வரவேற்றார். தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்க விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளித்திருந்த நிலையில் திருமாவளவன் இல்லத்திற்கு சென்று முதல்வர் விஜய் வாழ்த்து பெற்றுள்ளார்.
இதையும் படிங்க: தளபதியின் அடுத்த மூவ்..! IUML தலைவர் காதர் மொய்தினிடம் வாழ்த்து பெற்ற முதல்வர் விஜய்..!
அரசமைப்பு சட்டத்தின் முகப்புரையை முதலமைச்சர் விஜய்க்கு விசிக தலைவர் திருமாவளவன் பரிசாக வழங்கினார். முதலமைச்சர் விஜய் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும் விசிக தலைவர் திருமாவளவன் இல்லத்திற்கு வந்து நிர்வாகிகளை சந்தித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டின் முதல்வர் ஆனதற்கு வாழ்த்து..! ஸ்டாலின், EPS- க்கு முதலமைச்சர் விஜய் நன்றி..!