வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

மலைப்பாதையில் சடலத்தை டோலி கட்டி தூக்கிச் சென்ற அவலம்.. கொடுத்த நிதி என்னாச்சு? ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி..!

காரமடை அருகே மலைக்கிராமத்தில் சாலை வசதி இல்லாததால், இறந்தவரின் உடலை உறவினர்கள் டோலி கட்டி மூன்று கிலோ மீட்டர் துாக்கி சென்ற அவலம் நடந்துள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்து உள்ள நெல்லித்துறை ஊராட்சியில் கடமான்கோம்பை, நீராடி, பரளிக்காடு, கீழ் பில்லூர், மேல் பில்லூர், கோரப்பதி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்கள் அனைத்தும் அடர்ந்த வனப் பகுதிக்கு நடுவே அமைந்துள்ளன. இங்கு ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். கடமான்கோம்பை பகுதியை சேர்ந்த மணி என்பவர் கூலி வேலை செய்து வந்தார். இவர் பில்லூர் அணைப் பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்காக சென்று உள்ளார். 

அப்போது, அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்து உள்ளனர். இதனை அடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது சொந்த ஊரான கடமான்கோம்பைக்கு ஆம்புலன்ஸ் வாகனம் மூலமாக எடுத்துச் செல்லப்பட்டது. செல்லும் வழியில் நீராடியில் இருந்து கடமான்கோம்பை பகுதிக்கு செல்ல முறையான சாலை வசதி இல்லாத காரணத்தால் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சடலத்தை அவரது உறவினர்களிடம் ஒப்படைத்து சென்றனர்.

இதையும் படிங்க: வாடகை வீட்டு மாடியில் கஞ்சா வளர்த்த மாணவர்கள்.. அதிரடி சோதனை நடத்தி தட்டி தூக்கிய கோவை போலீஸ்..!

இதனை தொடர்ந்து அவரது உறவினர்கள் அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே சுமார் 3 கிமீ தொலைவிற்கு டோலி கட்டி கால்நடையாகவே தூக்கிச் சென்று தகனம் செய்து உள்ளனர். இச்சம்பவம் குறித்து அப்பகுதியை சேர்ந்த பழங்குடியின இளைஞர் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவிட்டு அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு உள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவத்துக்கு பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து உள்ளார். ஆயிரத்துக்கும் அதிகமான பழங்குடியினர் வசிக்கும் இப்பகுதியில் முறையான சாலை வசதி இல்லை என்பது தமிழக அரசின் அவலநிலைக்கு சான்று. மத்திய அரசின் திட்டங்களுக்கு பெயரை மாற்றுவதில் மட்டும் முனைப்புடன் இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

வாஜ்பாய் கொண்டு வந்த பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தை, முதல்வரின் கிராம சாலைகள் திட்டம் என்று பெயர் மாற்றினர். சென்ற ஆண்டு திமுக அரசு வெளியிட்ட அரசாணை படி ஒதுக்கிய 2,300 கோடி நிதி எங்கே சென்றது. யாரை ஏமாற்ற இந்த வெற்று அறிவிப்புகள்? இந்த திட்டத்தின் கீழ் அமைத்த சாலைகள் எத்தனை என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்வாரா? 10 ஆண்டுகளில், மத்திய அரசின் கிராம் சதக் யோஜனா திட்டத்தின் கீழ், மலைக் கிராமங்களில் சாலைகள் அமைக்க மத்திய அரசு பெருமளவில் நிதி ஒதுக்கியிருக்கிறது.  ஆனால் தமிழக மலைக் கிராமங்களில் இன்னும் சாலைகள் இல்லை. மக்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகிறார்கள். இத்தனை ஆண்டுகளாக மத்திய அரசு ஒதுக்கிய நிதி எங்கே சென்றது? இனியும் தாமதிக்காமல் உடனடியாக சாலைகள் அமைக்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

இதையும் படிங்க: 7 பேரால் சிதைக்கப்பட்ட சிறுமி! மாணவர்கள் போர்வையில் காம அரக்கன்கள்! கோவையில் கல்லூரி மாணவர்கள் கைது!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी