காவிரி நதி நீர் பங்கீடு பிரச்சினை இந்தியாவின் மிக நீண்டகால இடைமாநில நீர் சர்ச்சைகளில் ஒன்று. இந்தப் பிரச்சினையில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே தொடர்ந்து வரும் மோதலுக்கு மத்தியில், மேகதாது அணை திட்டம் மீண்டும் முக்கியப் பேசுபொருளாகியுள்ளது. 2025 நவம்பர் 13 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவு இந்த விவகாரத்தில் ஒரு முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேகதாது கர்நாடகாவின் பெங்களூரு தெற்கு மாவட்டத்தில் உள்ள கனகபுரா தாலுகாவில் காவிரி ஆற்றின் மீது கர்நாடக-தமிழ்நாடு எல்லைக்கு அருகில் அமைந்துள்ள இடம். கர்நாடக அரசு இங்கு சமநிலை நீர் தேக்க அணை கட்டும் திட்டத்தை முன்மொழிந்துள்ளது. இந்தத் திட்டம் சுமார் 67.16 டி.எம்.சி. நீரைத் தேக்கி வைக்கும் திறன் கொண்டதாகவும், 400 மெகாவாட் மின்சக்தி உற்பத்தியுடன் கூடியதாகவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மொத்த மதிப்பு சுமார் 9,000 கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த அணை பெங்களூரு மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளின் குடிநீர் தேவையை நிறைவேற்றவும், நீர் மேலாண்மையை மேம்படுத்தவும் உதவும் என்று கர்நாடகா கூறுகிறது. தமிழ்நாடு அரசு மற்றும் அரசியல் தலைவர்கள் இந்தத் திட்டத்தை காவிரி நீர் பங்கீட்டு உத்தரவுகளுக்கு எதிரானது என்று கருதுகின்றனர்.
இதையும் படிங்க: அது துரோகமாக தெரியவில்லையா...? - திமுகவை லிஸ்ட் போட்டு பொளந்து கட்டிய காங்கிரஸ் செல்லக்குமார்...!
மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் பேச வேண்டும் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இந்த நிலையில் மேகதாது அணையில் ஒரு செங்கல் கூட வைக்க விடமாட்டோம் என்பதில் தமிழ்நாடு காங்கிரஸ் உறுதியாக இருக்கிறது என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், பல்கலைக்கழக வேந்தராக முதலமைச்சர் இருப்பது குறித்து முதல்வர் விஜய் கொள்கை முடிவு எடுப்பார் என உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். முதல்வரை பல்கலைக்கழக வேந்தராக நியமிக்க வேண்டும் என்ற முந்தைய அரசின் நிலைப்பாட்டை பின்பற்ற வேண்டியதில்லை என்றும் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக்கழக ஐந்து ஆண்டுகள் ஆட்சிக்கு காங்கிரஸ் உறுதுணையாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "மலிவான அரசியல்"... காங்கிரஸ் மீது திடீர் தாக்குதல் ஏன்..? K.N. நேரு மீது மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு..!