வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
அரசியல்

தரமான சம்பவம் லோடிங்…!! – நாளை அரசியல் களமே அதிரப்போகுது… சீக்ரெட்டை உடைத்த செந்தில் பாலாஜி..!

கரூரில் நாளை முதல்வர் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்ள உள்ளதாக செந்தில் பாலாஜி தகவல்

கரூர் அடுத்த கோடங்கிப்பட்டியில் அமைந்துள்ள பட்டாளம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, கரூர் திமுக வேட்பாளர் தியாகராஜனை ஆதரித்து அப்பகுதி பொதுமக்களிடம் கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வாக்கு சேகரித்தார். அப்போது 100க்கும் மேற்பட்ட பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது பேட்டியளித்த செந்தில் பாலாஜி, கடந்த ஐந்து ஆண்டுகளில் கரூர் மாவட்டத்திற்கு மட்டும் சுமார் 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை முதலமைச்சர் வழங்கியுள்ளார். இதில் கரூர் மாநகராட்சியில் மட்டும் ஏறத்தாழ 1,140 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

இந்தச் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லி, ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று வாக்கு சேகரிக்க உள்ளோம். ஒரு சிலர் நான் கரூரில் இல்லை என்பதால் வெற்றி பெறுவோம் என்று பேசி வருகிறார்கள். கரூர் தொகுதியில் திமுக வேட்பாளர் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவார்.

இதையும் படிங்க: தேர்தல் வந்தாச்சு… ஓட்டு போடுங்க மக்களே..!! திருச்சியில் கே. என். நேரு பரப்புரை..!!

எதிர்க்கட்சியினரிடம் சொல்வதற்குச் சாதனைகள் ஏதுமில்லை என்பதால், அவர்கள் தேர்தல் அறிக்கையை மட்டும் நம்பியிருக்கின்றனர். ஆனால், திமுகவின் தேர்தல் அறிக்கை மக்களிடம் "சூப்பர் ஸ்டார்" போலச் சென்றடைந்துள்ளது.

கரூரிலிருந்து கோவை (கோவை தெற்கு) தொகுதிக்கு மாற்றப்பட்டது குறித்துக் கேட்டபோது, கழகத் தலைமை மற்றும் முதலமைச்சரின் கட்டளையை ஏற்றுச் செயல்படுவதே ஒரு தொண்டனாக என் பணி.

கரூரையும் கோவையையும் தனது இரு கண்களாகவும், உடல் மற்றும் உயிர் போன்றும் கருதுவதாக  தெரிவித்தார். 31 வயதில் தன்னை இந்த உலகிற்கு அடையாளப்படுத்தியது கரூர் மக்கள்தான் என்பதை நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.

நாளை ராயனூர் பகுதியில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் உரையாற்றுகிறார். இந்தக் கூட்டத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என தெரிவித்தார்.
 

இதையும் படிங்க: பாஜகவின் “முரட்டு அடிமை” EPS..! தி.மலையில் எ.வ.வேலுவை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பரப்புரை..!!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
ஜெகன் மோகன் ரெட்டி வீட்டு திருமணம்: நேரில் வாழ்த்திய முதலமைச்சர் விஜய் மற்றும் த்ரிஷா!தமிழ்நாடு
காசிமேடு மீனவர்கள் உயிரிழப்பு: தவெக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கண்டனம்!தமிழ்நாடு
ஆந்திரக் கடலில் உயிரிழந்த சென்னை மீனவர்கள்: தலா ₹7 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी