வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
உலகம் ›

4,000 கி.மீ தாண்டி தாக்குதல்! அமெரிக்காவுக்கு ஈரான் அதிர்ச்சி வைத்தியம்! டியாகோ கார்சியா கடற்படை தளம் நொறுங்கியது!

4 ஆயிரம் கி.மீ., தொலைவில் இந்தியப்பெருங்கடலில் அமைந்துள்ள கடற்படை தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது அமெரிக்க படையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஈரான் – அமெரிக்கா இடையே நடைபெற்று வரும் போரில் புதிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள அமெரிக்கா – பிரிட்டன் கூட்டு ராணுவத் தளமான டியாகோ கார்சியா மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தளம் ஈரானில் இருந்து சுமார் 4,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

அமெரிக்காவின் புகழ்பெற்ற செய்தி நிறுவனமான ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ இந்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இரண்டு ஏவுகணைகள் டியாகோ கார்சியா நோக்கி ஏவப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதில் ஒன்று பாதி வழியிலேயே தோல்வியடைந்தது. மற்றொன்றை அமெரிக்கப் படையினர் வானிலேயே சுட்டு வீழ்த்தினர்.

இந்தத் தாக்குதல் முயற்சி அமெரிக்க ராணுவத்துக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 4,000 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கும் அளவுக்கு ஈரான் தனது ஏவுகணைத் தொழில்நுட்பத்தை வளர்த்துள்ளது என்பது உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க: ‘பங்கர் பஸ்டர்’ குண்டுகள்!! ஈரான் ஏவுகணை தளம் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல்!

அமெரிக்க அதிகாரிகள், இந்த ஏவுகணைகள் கோரம்ஷார்-4 வகை கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணையாக இருக்கலாம் என கருதுகின்றனர். இந்தச் சம்பவம் ஈரானின் ராணுவ வலிமையை மீண்டும் ஒருமுறை உலகுக்கு நினைவூட்டியுள்ளது.

இதுவரை ஈரான் இந்தத் தாக்குதல் குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை. ஆனால் இந்த நடவடிக்கை மூலம், வளைகுடா பிராந்தியம் மட்டுமின்றி அரபிக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலில் உள்ள அமெரிக்க கப்பல்கள், தளங்கள் அனைத்தும் ஈரானின் ஏவுகணை வீச்சு எல்லைக்குள் இருப்பது தெளிவாகியுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதுடன், வளைகுடா நாடுகளின் எரிபொருள் கட்டமைப்புகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் ஈரான், இப்போது இந்தியப் பெருங்கடலிலும் தனது ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளது. இதனால் உலக அளவில் எரிபொருள் விலை உயர்வு மற்றும் பாதுகாப்பு கவலை மேலும் அதிகரித்துள்ளது.

இந்தச் சம்பவம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவ வட்டாரங்களில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க: தாக்குதலை தீவிரப்படுத்தும் ஈரான்! நிலைகுலைந்தது துபாய் ஏர்போர்ட்! நாளொன்றுக்கு ரூ.2,000 கோடி இழப்பு!!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள் ›

ஜெகன் மோகன் ரெட்டி வீட்டு திருமணம்: நேரில் வாழ்த்திய முதலமைச்சர் விஜய் மற்றும் த்ரிஷா!தமிழ்நாடு
காசிமேடு மீனவர்கள் உயிரிழப்பு: தவெக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கண்டனம்!தமிழ்நாடு
ஆந்திரக் கடலில் உயிரிழந்த சென்னை மீனவர்கள்: தலா ₹7 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी