வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு ›

பொறியியல் படிப்புக்கு குறையாத மவுசு.. இதுவரை 2.25 லட்சம் பேர் விண்ணப்பம்..!

பொறியியல் படிப்பில் சேர இதுவரை 2.25 லட்சத்திற்கும் அதிகமான மாணவ மாணவிகள் விண்ணப்பித்துள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

பிளஸ் 2 முடித்த பின்னர், உயர் கல்வியாக பொறியியல் படிக்கலாமா, படித்தால் வேலை கிடைக்குமா? வேறு என்ன படிக்கலாம் என்று மாணவர்களிடையே பல கேள்விகள் எழ தொடங்கும். இருப்பினும் தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான இடங்களில் நடத்தப்பட்டு வருகின்றன. அதேசமயம், ஆண்டுதோறும் பல்வேறு பொறியியல் கல்லூரிகள் மூடப்படுவதோடு, பல கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்தாகின்றன. இவற்றின் மத்தியில் பொறியியல் படித்தால் வேலை கிடைக்குமா என்ற அச்சம் அதிகரித்து வருகிறது. 

50-க்கும் மேற்பட்ட துறைகள் கொண்ட பொறியியல் படிப்பில், ஒரு காலத்தில் மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், சிவில் ஆகியவற்றை எடுத்து படிக்க மாணவர்கள் ஆர்வம் காட்டினர். ஆனால், கணினி துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் கடந்த 20 ஆண்டுகளில் பெருகிய நிலையில், இதனை தவிர்த்து மாணவர்கள் கணினி மற்றும் ரசாயனம், செயற்கை நுண்ணறிவு, தகவல் தொடர்பியல்  சம்மந்தமான படிப்புகளை தேர்வு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: பாலியல் குற்றவாளிகளை காப்பாற்ற இப்படியுமா? ஸ்டாலினின் ப்ளான் இதுதான்! ஆர்.பி உதயகுமார் விளாசல்..!

பொறியியல் படிப்புக்கான வரவேற்பு மாணவ, மாணவிகளிடம் குறையவில்லை என்பதை ஒவ்வொரு ஆண்டும் நிரூபிக்கும் விதமாக, லட்சக்கணக்கான மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். பொறியியல் படிப்புக்கும், வேலை வாய்ப்புக்கும் என்றுமே மவுசு குறையாது.

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளில் ஒற்றை சாளர முறையில் சேர கடந்த 7ம் தேதி முதல் விண்ணப்பப்பதிவு தொடங்கியது. இதுவரை 2,26,503 மாணவர்கள் போட்டி போட்டுகொண்டு பொறியியல் படிப்புகளை படிக்க விண்ணப்பித்துள்ளதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை அலுவலகம் தெரிவித்துள்ளது. 

இதையும் படிங்க: ஆட்டம் ஆரம்பம்.. அடிச்சு தூக்க போகுது மழை..! கோவை, நீலகிரிக்கு ஆரஞ்சு அலர்ட்..!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள் ›

தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी