×
 

19 இளம்பெண்கள்!! போதைமாத்திரை கொடுத்து பலாத்காரம்! நண்பனுக்கும் விருந்தாக்கிய கொடூரம்!

அந்த வீடியோவை பார்த்து நாங்களும் டிக்சன், நிகிலால் பாதிக்கப்பட்டு உள்ளோம் என 19 இளம்பெண்கள் புகார் அளித்தனர்.

பெங்களூரு ராஜாஜிநகரில் பிஏ முதலாம் ஆண்டு படித்து வந்த திருப்பூரைச் சேர்ந்த 19 வயது மாணவி, இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான 21 வயது மேற்கு வங்கத்தைச் சேர்ந்த டிக்சன் சான்ட்ரோ என்பவரால் கொடூரமாக பாதிக்கப்பட்டுள்ளார். 

காதலர் தினத்தன்று ஜக்கூரில் உள்ள வில்லாவுக்கு அழைத்துச் சென்ற டிக்சன், அவரது 35 வயது நண்பர் நிகிலுடன் சேர்ந்து மாணவிக்கு போதை மாத்திரை கொடுத்து கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். "வெளியில் சொன்னால் கொன்று விடுவோம்" என்று மிரட்டியுள்ளனர்.

ஆனால் தைரியமாக வெளியே வந்த மாணவி, தனக்கு நேர்ந்த கொடுமையை வீடியோவாக வெளியிட்டார். அது வைரலானதும், கடந்த 21-ஆம் தேதி அம்ருதஹள்ளி போலீசில் புகார் அளித்தார். பயத்தில் ஓடிய நிகில், அதற்கு முந்தைய நாளே மல்லேஸ்வரம் போலீசில் "மாணவி தன்னை ஹனிடிராப் செய்ய முயன்றாள்" என்று புகார் அளித்திருந்தார். ஆனால் மாணவி புகாரின் அடிப்படையில் இருவர் மீதும் வழக்கு பதிவானது. நேற்று முன்தினம் அம்ருதஹள்ளி போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

இதையும் படிங்க: ஈரான் மீது தாக்குதல் தொடங்கியாச்சு.. வீடியோ மூலம் வார்னிங் கொடுத்த டிரம்ப்.. ஷாக்கில் உலக நாடுகள்..!!

விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின. டிக்சனும் நிகிலும் பெங்களூரில் உள்ள பிரபல கல்லூரிகளில் படிக்கும் வெளிமாநில மாணவியரை குறிவைத்து சமூக வலைதளங்கள் மூலம் அறிமுகமாகி, நல்லவர்கள் போல் நடித்து காதல் வலையில் வீழ்த்தியுள்ளனர். 

பின்னர் வில்லாவுக்கு அழைத்துச் சென்று போதை பொருட்களை கொடுத்து உல்லாசம் கேட்டுள்ளனர். சம்மதிக்காதவர்களுக்கு வலுக்கட்டாயமாக போதை மாத்திரை கொடுத்து கூட்டு பலாத்காரம் செய்து, அதை வீடியோ எடுத்து மிரட்டியுள்ளனர்.

கார் விற்பனை டீலரான நிகிலுக்கு முக்கிய அரசியல் பிரமுகர்களுடன் தொடர்பு இருப்பதால் பல பெண்கள் புகார் அளிக்க பயந்துள்ளனர். ஆனால் திருப்பூர் மாணவி வீடியோ வெளியிட்ட தைரியத்தால் 19 இளம்பெண்கள் புகார் அளித்துள்ளனர். மேலும் சிலர் புகார் அளிக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

அந்த வில்லா கர்நாடகாவில் பணியாற்றும் ஐபிஎஸ் அதிகாரி ஒருவருக்கு சொந்தமானது. அவர் அதிகம் பயன்படுத்தாததால் இடைத்தரகர் மூலம் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. அந்த இடைத்தரகருக்கும் நிகிலுக்கும் தொடர்பு இருப்பதாக விசாரணை நடக்கிறது. அன்று வில்லாவில் நிறைய பெண்கள் இருந்ததாக மாணவி கூறியுள்ளார். அவர்களை அடையாளம் காணும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த வழக்கு பெங்களூரு மாணவியர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் அந்நியர்களுடன் பழகும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற அறிவுறுத்தல் எழுந்துள்ளது.

இதையும் படிங்க: சூடு பிடிக்கும் அரசியல் களம்... SDPI கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டி...! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share