வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

சென்னையின் 22 தொகுதிகளிலும் திமுக தான்… அமைச்சர் மா. சு. உறுதி..!!

சென்னையில் 22 தொகுதிகளிலும் திமுக தான் வெற்றிப் பெறும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

அமைச்சர் மா. சுப்பிரமணியன் தமிழக அரசியலில் நீண்டகால அனுபவம் கொண்ட மூத்த தலைவர்களில் ஒருவர். அவரது அரசியல் பயணம் 1970களில் தொடங்கியது. திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்த அவர், கட்சியின் இளைஞர் அணியில் துணைப் பொதுச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நெருக்கமானவராக அறியப்படும் இவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் 1999 முதல் வழக்கறிஞராகப் பணியாற்றி வரும் பின்னணியுடன், உள்ளூர் அரசியலில் இருந்து மாநில அளவில் உயர்ந்துள்ளார். 

அவரது தேர்தல் அனுபவம் மிகவும் விரிவானது. 2006-2011 காலகட்டத்தில் சென்னை மாநகர மேயராகப் பதவி வகித்தார். இதைத் தொடர்ந்து 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மா. சுப்பிரமணியன் சைதாப்பேட்டை தொகுதியில் திமுக வேட்பாளராகக் களமிறங்கினார்.

இதையும் படிங்க: திமுக பொறுப்பாளர் மனைவிகளுக்கு மட்டுமே அதை செஞ்சியிருக்காங்க…ஸ்டாலினை வெளுத்து வாங்கிய காளியம்மாள்…!

2021 சட்டமன்றத் தேர்தலில் மா. சுப்பிரமணியன் மீண்டும் சைதாப்பேட்டை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டார். 2026 சட்டமன்றத் தேர்தலிலும் அதே தொகுதியில் களம் காண்கிறார். அவர் தனது பரப்புரையை தீவிரப்படுத்தி உள்ளார். இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 5 ஆண்டுகளாக முதல்வர் ஸ்டாலின் செய்த சாதனைகளை மக்களிடம் சொல்லி வாக்குக் கேட்டு சென்று கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

நடந்தே சென்று வாக்காளர்களின் கரம் பற்றி, அவர்களுடன் நல்லுறவை உறுதி படுத்தும் வகையில் பிரச்சார பயணம் அமைந்து உள்ளதாக தெரிவித்தார். 2021 தேர்தலைப் போலவே சென்னையில் உள்ள 22 தொகுதிகளிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றும் உறுதிப்பட தெரிவித்தார். 

இதையும் படிங்க: வயசான மாமனாரை பாத்துக்க முடியல…. நீ எங்கள பாத்துக்கப்போறீயா? – செளமியா அன்புமணிக்கு எதிராக திமுக நிர்வாகி பிரசாரம்…!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी