வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் சிவராத்திரி விழா! தொடங்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு…!

சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று மாலை தொடங்கி வைக்க உள்ளார்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில் சார்பில் நடைபெற்றவுள்ள மகாசிவராத்திரி பெருவிழாவினை இன்று மாலை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைக்கிறார்.

உலகம் முழுவதும் உள்ள சிவாலயங்களில் மஹா சிவராத்திரி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். சிவராத்திரி இரவு சிவ பக்தர்கள் கண்விழித்து இறைவனை வழிபாடு செய்வார்கள். அப்படி சிவராத்திரிக்கு கண்விழித்து வழிபாடு மேற்கொண்டால் சிவ பெருமானின் பரிப்பூரண அருளை பெற முடியும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இதையும் படிங்க: எடப்பாடி, சசிகலா, ஓபிஎஸ், தினகரன் ஒரே அணியில்…தாய் வழி வந்த தங்கங்கள்…போஸ்டரால் பரபரப்பு

சிவராத்திரி நேரத்தில் சிவ பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள், அர்ச்சனை ஆகியவை செய்யப்படும். திருமாலும், விஷ்ணுவும் சிவபெருமானின் அடிமுடி காணாது திகைத்து போய் நின்றபோது லிங்கோத்பவராக காட்சி அளித்த தினமே சிவராத்திரி.

அப்படியாக இன்று மஹா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து சிவாலயங்களிலும் 4 கால சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளன. மேலும், இசை, நாட்டியம், பக்தி சொற்பொழிவுகள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

இதன் ஒரு பகுதியாக, மயிலாப்பூரில் உள்ள அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோவிலில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவினை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைக்க உள்ளார்.

இதையும் படிங்க: கண்டெய்னர்களை திறந்து பார்த்த அதிகாரிகள்….அடுத்தடுத்த அதிர்ச்சி…ரூ.6.6 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் 

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी