அஜித்குமார் கொலை வழக்கு! நிகிதாவை நேரில் ஆஜராக சொல்லுங்க!! சிபிஐ விசாரணைக்கு கிரீன் சிக்னல் காட்டிய கோர்ட்!
அஜித்குமார் கொலை வழக்கில் நிகிதாவை நேரில் அழைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டி மதுரை கோர்ட்டில் சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் நிகிதாவை நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சிபிஐ விசாரணையில், பேராசிரியை நிகிதா அளித்த நகை திருட்டு புகார் பொய்யானது என உறுதியாகியுள்ள நிலையில், அவரை நேரில் விசாரிக்க மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித்குமார் (வயது 28). கடந்த 2025 ஜூன் மாதம் 27-ஆம் தேதி, மதுரையைச் சேர்ந்த பேராசிரியை நிகிதா தனது தாயுடன் கோயிலுக்கு வந்தார்.
கார் பார்க்கிங் விவகாரத்தில் அஜித்குமாருடன் சிறு வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. தரிசனம் முடித்து திரும்பிய நிகிதா, காரில் வைக்கப்பட்டிருந்த சுமார் 10 பவுன் நகைகள் காணாமல் போனதாகவும், அதற்கு அஜித்குமார்தான் காரணம் எனவும் போலீசில் புகார் அளித்தார்.
இதையும் படிங்க: பாஜக பொதுச்செயலாளர் காரை அடித்து நொறுக்கிய போதை கும்பல்! கும்பகோணம் அருகே அதிர்ச்சி சம்பவம்!
இதையடுத்து திருப்புவனம் போலீசார் விசாரணை தொடங்கினர். பின்னர் மானாமதுரை தனிப்படை போலீசார் வழக்கை கையில் எடுத்தனர். அஜித்குமாரை அழைத்துச் சென்று 2 நாட்கள் கடுமையாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து 5 தனிப்படை போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். பின்னர் வாகன டிரைவரும் கைது செய்யப்பட்டார். வழக்கு மதுரை ஐகோர்ட்டில் தொடரப்பட்டு, சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. மொத்தம் 10 போலீசார் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
சமீபத்தில் நடந்த விசாரணையில் சிபிஐ, நிகிதாவின் நகை திருட்டு புகாரில் உண்மையில்லை என தெரிவித்தது. அஜித்குமாரின் மரணம் காவல் மரணம் (custodial death) என உறுதிப்படுத்தியது. நீதிமன்றம் கடும் வேதனை தெரிவித்து, காவல்துறைக்கு பாடம் புகட்டுவோம் எனக் கூறியது.
இந்நிலையில், வழக்கின் முக்கிய சாட்சியான நிகிதாவை நேரில் விசாரிக்க சிபிஐ மனு தாக்கல் செய்தது. மதுரை மாவட்ட நீதிமன்றம் இதை ஏற்று, நிகிதாவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. இது வழக்கில் புதிய திருப்பமாக அமைந்துள்ளது. அஜித்குமாரின் தாயார் உள்ளிட்டோர் நிகிதா மீது நடவடிக்கை கோரி வருகின்றனர். இந்த வழக்கு நீதி பெறுவதற்கான மக்கள் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: ‛எந்த ஊரு நாய்டா நீ’ வடமாநில இளைஞர்கள் மீது தாக்குதல்! கடையை அடித்து நொறுக்கிய போலீஸ்!