வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

ஊடக விளம்பரத்துக்கு தான் விஜய் திமுகவை குறை சொல்றாரு… கே.என்.நேரு பதிலடி..!

ஊடகத்தில் விளம்பரம் தேடவே திமுகவை விஜய் குறை கூறி வருவதாக அமைச்சர் கே என் நேரு பதிலடி கொடுத்துள்ளார்.

இன்று மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினரும் பிரபலங்களும் மகளிர் தின வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். 

இந்த நிலையில், மகளிர் தினத்தை ஒட்டி தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், பாதுகாப்பாக இருந்தால் தானே சந்தோஷத்தை உணர முடியும் என்று நீங்கள் நினைப்பது எனக்கு புரிகிறது எனக்கு உரிய விஜய், திமுக அரசு நம்மை ஏமாற்றி விட்டதாக வெளிப்படையாகவே பேசி இருந்தார். 

மேலும் அவர்களை அகற்றுவோம் 2026 இல் மாற்றத்தை ஏற்படுத்தி மகளிருக்கான பாதுகாப்பை உறுதி செய்வோம் என பேசி இருந்தார். 

இதையும் படிங்க: கட்சி கொடியும் இல்ல, கட்சி பேரும் இல்ல, அரசியலும் பேசல… இஃப்தாரில் விஜய்யை கவனிச்சீங்களா?

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற கருத்தை ஆணித்தரமாக தனது வீடியோவில் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் விஜயின் பேச்சுக்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலடி கொடுத்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஊடக விளம்பரத்திற்காகவே திமுகவை விஜய் குறை கூறி வருவதாக விமர்சித்தார்.

தமிழ்நாட்டில் நடப்பது பெண்களுக்கான ஆட்சி மற்றும் பெண்களை பாதுகாப்பதற்கான ஆட்சி என கூறினார்.

இதையும் படிங்க: எங்கள் கூப்பிட்டு வச்சி அசிங்கப்படுத்துறீங்களா?… தவெகவினர் இஸ்லாமியர்கள் இடையே கடும் வாக்குவாதம்…!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी