ஒரே ஆள்… 233 ஓட்டுகள்… ஆதாரத்துடன் வாக்குத்திருட்டை அம்பலப்படுத்திய ராகுல் காந்தி…!
தேர்தல் ஆணையத்துடன் இணைந்து பாஜக வாக்குத்திருட்டை நிகழ்த்தி உள்ளதாக ராகுல் காந்தி பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
வாக்கு திருட்டு நடைபெற்றதாக ஏற்கனவே மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறார். ஆதாரத்துடன் ராகுல் காந்தி வாக்குத்திருட்டை அம்பலப்படுத்தி வருகிறார். இந்த நிலையில் மீண்டும் வாக்குத்திருட்டு தொடர்பாக ஆதாரங்களை வெளியிட்டு ராகுல் காந்தி பேசினார். ஹரியானா தேர்தலில் நடந்த முறைகேடுகளுக்கான முக்கிய சிசி டிவி ஆதாரங்களை தேர்தல் ஆணையம் அழித்துவிட்டது என்று தெரிவித்தார்.
உத்தரபிரதேசத்தில் வாக்களித்த பல்வேறு பாஜக தலைவர்கள், அவர்களின் உறவினர்கள் ஹரியானாவிலும் வாக்களித்து உள்ளனர் என்று கூறினார். பாஜக உறுப்பினர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உத்தர பிரதேசத்திலும் ஹரியாவினாவிலும் வாக்களித்துள்ளனர் என்று பேசினார்.
ஹரியானா மாநிலத்தில் வெறும் ஒரு லட்சத்து பதினெட்டாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வெற்றி பெற்றது என்றும் ஹரியானா தேர்தலில் பாஜக 39.94 சதவீத வாக்குகள் பெற்ற நிலையில் காங்கிரஸ் 39.09 வாக்குகள் பெற்றது எனவும் எடுத்துரைத்தார். ஹரியானா வாக்காளர் பட்டியலில் 1,24,177 பேரின் புகைப்படங்கள் போலியாக பதிவு செய்துள்ளனர் என்றும் தேர்தல் ஆணையம் வெளியிட்ட ஹரியானா மாநில வாக்காளர் பட்டியலை வெளியிட்டு ராகுல் காந்தி இந்த பரபரப்பான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். தேர்தல் ஆணையத்துடன் இணைந்து பாஜக வாக்குத்திருட்டில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: இப்படியே போனா எப்படி? 35 மீனவர்கள் கைது.. உடனே நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலின் கடிதம்...!
வாக்களித்த சில நொடிகளில் போலி வாக்காளர்களை நீக்கியுள்ளது தேர்தல் ஆணையம் என்றும் தெரிவித்தார். பூத் அளவில் இருந்தே தேர்தல் ஆணையம் வாக்குத்திருட்டை தொடங்கி நடைமுறைக்கு கொண்டு வந்து விட்டதாக ராகுல் காந்தி விளக்கம் அளித்தார். ஒரே புகைப்படத்துடன் இரண்டு வாக்குச்சாவடிகளில் 233 வாக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். ஒரே முகவரியில் பலரையும் சேர்த்து 19 லட்சம் வாக்குகள் செலுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: அச்சப்பட வேண்டாம்... வேலை தரமா இருக்கும்..! தேர்தல் ஆணையம் உறுதி...!