மேகதாது அணை கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் எனக் கூறி கர்நாடகா அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மேகதாது அணை கட்டுவதற்கு திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகா அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. மேகதாது அணை கட்டுமானத்திற்கு திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு மத்திய நீர் ஆணையத்திடம் வழங்கும்போது தமிழக அரசு, காவிரி மேலாண்மை ஆணையம், மற்றும் ஒழுங்காற்று குழு ஆகியவற்றிடம் கருத்து கேட்ட பிறகே முடிவெடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பிக்கும் உத்தரவுகளை கர்நாடகா உள்ளிட்ட அனைத்து மாநில அரசுகளும் நிச்சயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதி உத்தரவிட்டார். திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தாலும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு உரிய தண்ணீரை வழங்கவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு என்பதை தெளிவுபடுத்துவதாகவும் கூறினார்.

மேகதாது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுகளும் முடித்து வைக்கப்படுவதாகவும் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு நீதிமன்றம் அனுமதி கொடுக்கவில்லை என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். விரிவான திட்ட அறிக்கை குறித்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் விவாதிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அமைச்சர் துரைமுருகன் சொத்துக்குவிப்பு வழக்கு! எதுக்கு COURT மாறுச்சு? போலீசுக்கு சரமாரி ஹைகோர்ட் கேள்வி..!
கர்நாடகா அரசின் முயற்சிகளை தமிழக அரசு முளையிலேயே கிள்ளி எறியும் என்ற திட்டவட்டமாக தெரிவித்தார். காவிரி டெல்டா பசங்க விவசாயிகளின் நலனை ஒருபோதும் திமுக அரசு விட்டுக் கொடுக்காது என்றும் கூறினார். மேகதாதுவில் அணை கட்ட அனுமதி கொடுக்கப்பட்டிருப்பதாக தவறான தகவல் பரப்பப்படுவது கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்துள்ளார்
இதையும் படிங்க: உங்க குடும்பத்தொழில் தான் முக்கியமா? தமிழக உரிமையை மீட்டு எடுங்கள்... இபிஎஸ் விளாசல்...!