விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டியில் செயல்பட்டு வந்த சட்டவிரோதப் பட்டாசு தயாரிப்புக் கூடத்தில் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
செங்கமலப்பட்டி பகுதியில் உரிய அனுமதியின்றி வீட்டின் கொட்டகையில் சட்டவிரோதமாகப் பட்டாசு தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக உராய்வு காரணமாக ஏற்பட்ட உராய்வுத் தீ, அடுத்தடுத்துப் பட்டாசுகளில் பற்றி எறிந்து பயங்கரச் சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்த பயங்கர விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே சிலர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், தீக்காயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ராமச்சந்திரன் என்பவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், சிகிச்சையில் இருந்தவர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து தற்போது இந்த வெடிவிபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: சிவகாசியில் பட்டாசு ஆலை வெடி விபத்து..! வெடித்து சிதறும் பட்டாசுகள்... நெருங்க முடியாமல் மீட்பு பணிகளில் தொய்வு..!

இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர், சட்டவிரோதமாகப் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட உரிமையாளர் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: "பண்டிகை சீசனில் இதை மறக்காதீங்க!" - காதி, கைத்தறிப் பொருட்களை வாங்கப் பிரதமர் மோடி வேண்டுகோள்!