பகல்காம் தாக்குதலுக்கு பிறகு முதல் முறையாக நேற்று ஜம்மு-காஷ்மீர் சென்ற மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் எல்லையில் பாதுகாப்பு நிலை குறித்து ஆய்வு செய்த பின் பாதுகாப்பு படை வீரர்களுடன் கலந்துரையாடினார். இந்நிலையில் இன்று குஜராத்தில் உள்ள பூஜ் விமானப்படை தளத்திற்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்றார்.
இந்தியாவின் முக்கிய எல்லைகளில் பாதுகாப்பை வலுப்படுத்துவதில் மத்திய அரசு தொடர்ந்து கவனம் செலுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. பாகிஸ்தானுடன் 508 கிலோமீட்டர் நீள எல்லையை பகிர்ந்து கொள்ளும் குஜராத், நான்கு நாள் இந்தியா பாகிஸ்தான் ராணுவ மோதலின் போது பாகிஸ்தான் ட்ரோன்களைப் பயன்படுத்தி குறிவைத்த மாநிலங்களில் ஒன்றாகும்.

பாகிஸ்தான் ட்ரோன்களைப் பயன்படுத்தி பூஜ் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், இந்திய ஆயுதப்படைகள் அச்சுறுத்தலை வெற்றிகரமாக செயலிழக்கச் செய்தன. இந்த நிலையில் புஜ் விமானப்படை தளத்தின் செயல்பாட்டு தயார் நிலை மற்றும் உள்கட்டமைப்பு குறித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் ஆய்வு செய்தார். அப்போது பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்க தளத்தின் தயார் நிலை குறித்து அமைச்சருக்கு அதிகாரிகள் விளக்கினர்.
இதையும் படிங்க: இந்திய ராணுவத்தை அவமதித்தால்.. வானதி சீனிவாசன் விடுக்கும் எச்சரிக்கை..!
அங்கு விமானப்படை வீரர்கள் மத்தியில் அமைச்சர் பேசியதாவது, "1965 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான நமது வெற்றிக்கு புஜ் விமானப்படைத் தளம் சாட்சியாக இருந்தது. இன்று மீண்டும் பாகிஸ்தானுக்கு எதிரான நமது வெற்றிக்கு சாட்சியாக உள்ளது. நேற்று ஸ்ரீநகர் சென்று ராணுவ வீரர்களைச் சந்தித்துப் பேசினேன். இன்று விமானப்படை வீரர்களுடன் கலந்துரையாடுகிறேன். இன்று இங்கு இருப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இரு படைகளும் இந்திய எல்லையை பாதுகாத்துள்ளீர்கள். உங்களின் தைரியத்துக்கு தலைவணங்குகிறேன்.

ஆபரேஷன் சிந்தூரின்போது நீங்கள் மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளும் இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டில் உள்ள இந்தியர்களையும் பெருமைப்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் வளர்க்கப்படும் பயங்கரவாதத்தை முறியடிக்க இந்திய விமானப்படைக்கு வெறும் 23 நிமிடங்கள் மட்டுமே போதுமானதாக இருந்தது. சர்வதேச நிதி ஆணையம் கொடுத்த ஒரு பெரும் நிதியை பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு வழங்கியுள்ளது. அந்த நாட்டில் பயங்கரவாத உள்கட்டமைப்பை மேம்படுத்த பாகிஸ்தான் அந்த நிதியைப் பயன்படுத்தியுள்ளது.

இந்தியா நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் குடும்பத்தினருக்கு பாகிஸ்தான் ரூ.14 கோடி நிதி அளித்துள்ளது. பயங்கரவாதி மசூத் அசாருக்கு பாகிஸ்தான் நிதி கொடுத்துள்ளது. இப்படி தொடர்ந்து பாகிஸ்தான் அரசு உதவி செய்து வருகிறது. அங்குள்ள பயங்கரவாதிகளை முழுமையாக அழிக்கும் வரை இந்தியா ஓயாது. பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் பயங்கரவாதிகள் கைகளில் சிக்கும் அபாயம் உள்ளது. சர்வதேச செலாவணி நிதியம் கொடுத்த நிதியை பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு வழங்கி உள்ளது. அப்படி நிதி கொடுப்பதை பரிசீலனை செய்து ரத்து செய்ய வேண்டும்.

மீண்டும் பயங்கரவாதத்தை பாகிஸ்தான் வளர்க்கத் தொடங்கிவிட்டது. பாகிஸ்தான் அணு ஆயுதங்கள், பயங்கரவாத அமைப்புகளின் கையில் செல்ல வாய்ப்புள்ளது. இனி பாகிஸ்தானுக்கு நிதி வழங்குவது குறித்து சர்வதேச நிதி ஆணையம் ஒரு முறை யோசிக்க வேண்டும். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை இன்னமும் முடிவடையவில்லை நீங்கள் பார்த்த ஆபரேஷன் சிந்தூர் வெறும் ட்ரைலர்தான். சரியான நேரம் வரும்போது அவர்களுக்குத் தேவைப்பட்டால் முழு படத்தையும் நாம் இந்த உலகிற்கு காட்டுவோம். பாகிஸ்தான் இப்போது சோதனைக் காலத்தில் உள்ளது.

தற்போது நாமே உற்பத்தி செய்கிறோம். பாகிஸ்தான் மண்ணில் அமைந்திருந்த ஒன்பது பயங்கரவாத முகாம்களை நீங்கள் எவ்வாறு அழித்தீர்கள் என்பதை உலகம் ஆச்சரியத்துடன் பார்த்தது. இந்திய விமானப்படை தங்கள் வலிமையை மட்டுமல்ல, இப்போது இந்தியாவின் தொழில்நுட்பமும் மாறிவிட்டது என்பதை உலகிற்கு நிரூபித்தது என்றும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அதிர்ச்சி பின்னணி.. ராணுவ அதிகாரியின் தந்தை தீவிரவாதியா? பயங்கரவாதிகளுடன் ஒட்டி உறவாடும் பாக்.,?