நீட் தேர்வில் ஏற்பட்டுள்ள கேள்வித்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் இளைஞர்களின் உரிமைகளுக்காக குரல் எழுப்பி வரும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாளை ஜூலை 24 அன்று நாடு தழுவிய அமைதி வழி போராட்டத்திற்கு இந்த அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
மாவட்ட தலைநகரங்கள் உட்பட பல்வேறு இடங்களில் மாணவர் அமைப்புகள், இளைஞர் அமைப்புகள் மற்றும் பிற சமூக அமைப்புகளுடன் இணைந்து இந்த போராட்டத்தை நடத்துமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து தொடர்ந்து நீதி கோரும் குரல்கள் உள்ளன. பல மாணவர்கள் தங்கள் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பொறுப்புள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.

டெல்லியில் ஜந்தர் மந்தரில் தொடங்கிய போராட்டம் படிப்படியாக வலுப்பெற்று, பாராளுமன்ற நோக்கிய பேரணியாக மாறியது. போலீஸ் நடவடிக்கைகள், உரையாடல்கள் உள்ளிட்ட சம்பவங்களுக்கு மத்தியிலும் CJP தொடர்ந்து தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து வருகிறது.
இதையும் படிங்க: டெல்லியில் நிலவும் பதற்றம்..!! மாணவர்களுக்கு ஆதரவாக அன்னா ஹசாரே மவுன போராட்டம்..!!
கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே உள்ளிட்ட தலைவர்கள் மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் வகையில், தேர்வு முறைகேடுகளுக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என வலியுறுத்துகின்றனர். இந்த போராட்டம் அமைதியான முறையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் உள்ள மாணவர் அமைப்புகள், பல்கலைக்கழக மாணவர்கள், பெற்றோர் சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் இதில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. போராட்டத்திற்கான வழிகாட்டி நெறிமுறைகளும், பிரச்சார பொருட்களும் பகிரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கை நாடு முழுவதும் உள்ள இளைஞர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: டெல்லி பதற்றம் உச்சம்... NEET போராட்டம் எதிரொலி; 16 மெட்ரோ நிலையங்கள் 2-வது நாளாக மூடல்!