டெல்லியில் நடந்த போராட்டத்தின் எதிரொலியாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்துள்ளார். இந்தியாவில் மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு, கடந்த சில ஆண்டுகளாகவே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. 2026ஆம் ஆண்டில் இந்தப் பிரச்னை உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. மே 3 அன்று நடைபெற்ற தேர்வில் கேள்வித் தாள் கசிவு குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து, தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனால் 22 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.
பின்னர் மீண்டும் தேர்வு நடத்தப்பட்டாலும், மாணவர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளிடையே கடும் எதிர்ப்பு வெடித்துள்ளது. டெல்லியின் ஜந்தர் மந்தரில் ஜூன் 6 முதல் தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டங்கள், இந்திய இளைஞர் எழுச்சியின் அடையாளமாக மாறின. 'கரப்பான் பூச்சி ஜனதா' உள்ளிட்ட இளைஞர் அமைப்புகளும், மாணவர் சங்கங்களான SFI, AISA போன்றவையும் இதில் முன்னணியில் உள்ளன.

மாணவர்கள் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், தேர்வு முறைகேடுகளுக்கு உயர்மட்ட விசாரணை வேண்டும், முழுமையான சீர்திருத்தங்கள் வேண்டும் என வலியுறுத்துகின்றனர். அது மட்டுமல்லாது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற முக்கிய வலியுறுத்தலை முன்வைத்து போராடி வருகின்றனர். டெல்லி போராட்டம் பல்வேறு மாநிலங்களிலும் எதிரொளித்து வருகிறது.
இதையும் படிங்க: டெல்லியை உலுக்கும் போராட்டம்... வரலாறு காணாத சர்ச்சை... அமித்ஷா - தர்மேந்திர பிரதான் சந்திப்பு.!!
நேற்றைய தினம் மத்திய அரசு மற்றும் கரப்பான் பூச்சி ஜனதா தளம் கட்சியினர் பேச்சுவார்த்தை நடத்தினர். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதில் திட்டவட்டமாக தங்கள் நிலைபாட்டை தெரிவித்தனர். ஒருநாள் அவகாசம் கேட்டிருந்த மத்திய அரசு இன்று தங்களது முடிவை அறிவித்துள்ளது. அதன்படி நீட் முறையீடுகளை கண்டித்து மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் எதிரொளியாக மத்திய அமைச்சர்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை தர்மேந்திர பிரதான் பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இதையும் படிங்க: வன்முறையாக மாறிய நீட் போராட்டம்... போர்க்களமான பீகார்..! கல்வீச்சு, தடியடியால் பரபரப்பு..!