தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரக் களத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசிய சில வார்த்தைகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. தமிழக வெற்றிக் கழக வேட்பாளரான சத்தியபாமாவைக் குறிப்பிட்டு அவர் பேசியபோது, மக்கள் அவரை பெட்டி பாமா என்றும் பல்டி பாமா என்றும் அழைப்பதாகக் குறிப்பிட்டார். அந்த உருவத்தை வைத்துக்கொண்டு எப்படி பல்டி அடித்தார்கள் என்று தெரியவில்லை எனவும் அவர் கூறியிருந்தார்.
இந்தப் பேச்சு உருவக் கேலி மற்றும் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் அமைந்ததாகக் கருதப்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தினர் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.இந்தப் பேச்சு வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதும் தவெக தரப்பில் பெரும் அதிருப்தி எழுந்தது. கட்சியின் அமைச்சர்களும் நிர்வாகிகளும் ஸ்டாலினின் வார்த்தைகளை வன்மையாகக் கண்டித்தனர்.

ஒரு முன்னாள் முதலமைச்சர் பெண் வேட்பாளரின் உடல் தோற்றத்தைக் குறிப்பிட்டு கேலி செய்வது அரசியல் மரபுக்கு எதிரானது என்றும், பெண்களின் கண்ணியத்தைப் புண்படுத்தும் செயல் என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர். தவெக தரப்பில் இது தோல்விப் பதற்றத்தின் வெளிப்பாடு என்றும் விமர்சிக்கப்பட்டது.இந்தச் சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழக வழக்கறிஞர் அணி உடனடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
இதையும் படிங்க: "நீலிக்கண்ணீர் நாடகம்"..! தவெக வேட்பாளர் சத்தியபாமாவை சாடிய தமிமுன் அன்சாரி..!!
ஸ்டாலின் பேசிய வீடியோவை ஆதாரமாக இணைத்து அவர்கள் புகார் மனுக்களைத் தயாரித்துள்ளனர். தலைமை தேர்தல் அதிகாரி, மாநில காவல் தலைமை இயக்குநர், சென்னை காவல் ஆணையர், தாராபுரம் மற்றும் திருப்பூர் தேர்தல் அலுவலர்கள், மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஆகியோரிடம் இந்தப் புகார் மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. சத்தியபாமாவை உருவக் கேலி செய்தது தேர்தல் விதிமுறைகளை மீறும் செயல் என்றும், பெண்களுக்கு எதிரான அவமதிப்பு என்றும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகளைப் பின்பற்றாததால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நான் சொல்லி அழுதாரா சத்தியபாமா? பெண்ணின் கண்ணீரை அரசியலாக்காதீர்கள்! அமைச்சர் ராஜ்மோகன் ஆவேசம்!!