தஞ்சாவூரில் காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் அரசியல் பரபரப்பை உருவாக்கியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதைத் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
விவசாயிகளின் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது முதலமைச்சர் விஜய்யை ‘டம்மி முதல்வர்’ எனக் குறிப்பிட்டு பேசினார். அதுமட்டுமில்லாத முதல்வர், நடிகை குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசியதாக கண்டனங்கள் வலுத்தன. இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டிருக்கும் சூழ்நிலையில் தஞ்சை போலீசார் அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் சிலருக்கு ரத்த காயங்கள் ஏற்பட்டு நிலையில் போலீஸ் அராஜகம் செய்வதாக கூறி முழக்கங்களை எழுப்பினர். உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டு இருக்கும் சூழ்நிலையில் தமிழக முழுவதும் உள்ள திமுகவினர் கொந்தளித்துள்ளனர்.
இதையும் படிங்க: காவிரி உரிமையை காத்துல பறக்கவிடாதீங்க..! போராட்டம் பெருகும்.. ஸ்டாலின் எச்சரிக்கை..!!
தேனியில் ஓ பன்னீர்செல்வம் தலைமையில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து உதயநிதி ஸ்டாலின் அதிரடியாக கைது செய்யப்பட்ட நிகழ்வை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். தற்போது உதயநிதி ஸ்டாலின் மீது ஒன்பது பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு இருக்கிறது. இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். இதற்கிடையில் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டு இருக்கும் சம்பவத்தை கண்டித்து மக்களவையில் திமுகவினர் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.
இதையும் படிங்க: "தாரைவார்க்கப்படும் காவிரி உரிமை"..! அனைத்துக் கட்சிக் கூட்டம் எப்போது.? உதயநிதி தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்..!!