போதை பழக்கத்தில் உள்ள சிறார்கள் மற்றும் இளைஞர்களுக்கு விற்பனை செய்வதற்காக ஆன்லைனில் 700 மாத்திரைகள் வாங்கிய இளைஞர் கைது செய்யப்பட்டார். மாத்திரைகளை பறிமுதல் செய்த காவல்துறையினர் இளைஞர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள T.கள்ளிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தங்கபாண்டியன் (வயது 20). இவர் வலி நிவாரணத்திற்காக பயன்படுத்தப்படும் மாத்திரைகளை ஆன்லைனில் ஆர்டர் செய்து அதனை இளைஞர்களுக்கு போதை மாத்திரையாக விற்பனை செய்வதாக பெரியகுளம் தென்கரை காவல்துறைக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்பொழுது பார்சல் டெலிவரி செய்ய வந்தவரிடமிருந்து தங்கபாண்டியன் பார்சலை பெற்றபோது மறைந்திருந்த காவல்துறையினர் அவர் பெற்ற பார்சலையில் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து பார்சலை பிரித்து பார்த்த பொழுது அதில் 700 மாத்திரைகள் இருப்பது தெரிய வந்தது.
இதையும் படிங்க: மதுபோதையில் நண்பனின் ஆடைகளை கலைந்து... சக நண்பர்கள் கூட்டு சேர்ந்து செய்த கொடூரம்... தேனியில் பரபரப்பு...!
இது குறித்து தென்கரை காவல்துறையினர் அந்த இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு போதை பயன்பாட்டிற்காக மாத்திரைகளை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி அதனை விற்பனை செய்தது தெரியவந்தது இதனை தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இளைஞரை நீதிமன்றத்தில் நிறுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: இதுக்கு ஒரு என்டே இல்லையா? - பள்ளி மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை...அதிரும் தேனி...!