சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேலின் பிலாயில் உள்ள வீட்டில் அமலாக்க இயக்குநரகம் (ED) இன்று சோதனை நடத்தியுள்ளது. மதுபான மோசடி தொடர்பான பணமோசடி வழக்கில் அவரது மகன் சைதன்யா மீது ஏற்கனவே சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கிடைத்த புதிய தகவலின் அடிப்படையில், பிலாய் நகரில் உள்ள சைதன்யாவின் வீட்டை அமலாக்கத்துறை சோதனை செய்தது. இந்த வீட்டில் சைதன்யா தனது தந்தை பூபேஷ் பாகேலுடன் வசித்து வருகிறார்.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக மார்ச் 2025ம் ஆண்டு சைதன்யா பாகேலுக்கு எதிராக அமலாக்கத்துறை இதேபோன்ற சோதனையை நடத்தியது. இந்த மதுபான ஊழலில் குற்றத்திலிருந்து பெறப்பட்ட பணம் சைதன்யாவுடையது தான் என அமலாக்கத்துறை நம்புகிறது.
சத்தீஸ்கர் அரசுக்கு பெரும் இழப்பு:
இந்த மோசடியால் சத்தீஸ்கர் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டதாகவும், இதன் மூலம் மோசடி குமப்ல் ரூ.2,100 கோடிக்கும் அதிகமான சட்டவிரோதப் பணத்தை சம்பாதித்ததாகவும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. இதனிடையே, இன்று காலை பூபேஷ் பாகேல் சமூக ஊடக தளமான X இல் ஒரு பதிவின் மூலம் இந்த சோதனை குறித்த தகவலைப் பகிர்ந்து கொண்டார். சட்டமன்றக் கூட்டத்தொடரின் கடைசி நாளில் அமலாக்கத் துறை குழு பிலாயில் உள்ள தனது வீட்டை அமலாக்கத்துறை சோதனையிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மதமாற்ற வழக்கில் கைதான சங்கூர்பாபா..! ரூ.40 கோடி சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை அதிரடி..!
பழிவாங்கும் நடவடிக்கையா?
சத்தீஸ்கரில் சட்டமன்றக் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்தபோது இந்த சோதனை நடத்தப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்த மதுபான ஊழல் மாநில கருவூலத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியதாக அமலாக்கத் துறை கூறுகிறது. அமலாக்கத்துறை கூற்றுப்படி, இந்த ஊழலில் ஈடுபட்டவர்கள் மதுபான கும்பலின் ஒரு பகுதியாக செயல்பட்டு, சட்டவிரோதமாக பெரும் லாபம் ஈட்டியுள்ளதாக குற்றச்சாட்டியுள்ளது. சைதன்யா பாகேல் இந்த சட்டவிரோதப் பணத்தைப் பயன்படுத்திக் கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டதால், அவர் மீது அமலாக்கத் துறை நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அமைச்சர் தம்பி மீதான CBI வழக்கில் தலைகீழ் திருப்பம்.. ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு..!