சென்னை மாவட்டத்தில் தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ல் நடைபெற்ற வாக்குப்பதிவு தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் மொத்தம் 24,21,186 வாக்குகள் பதிவாகியிருப்பதாகக் கூறப்படும் தகவல், தேர்தல் நடைமுறைகள் மற்றும் வாக்காளர் பட்டியல் சீரமைப்பு போன்ற பின்னணியில் முக்கியத்துவம் பெறுகிறது.
சென்னை மாவட்டம் 16 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இங்கு வாக்காளர் எண்ணிக்கை கடந்த சில மாதங்களில் கணிசமான மாற்றங்களைச் சந்தித்துள்ளது.தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR) மூலம் சென்னையில் உள்ள வாக்காளர் பட்டியல் மறுஆய்வு செய்யப்பட்டது.

இதற்கு முன்பு சுமார் 40 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், பல பெயர்கள் நீக்கப்பட்டு, இறுதி பட்டியலில் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. பிப்ரவரி 2026-ல் வெளியான இறுதி வாக்காளர் பட்டியலின்படி சென்னை மாவட்டத்தில் மொத்தம் 28,30,936 வாக்காளர்கள் இருந்தனர்.
இதையும் படிங்க: தலைகீழாய் மாறிய தலைநகரின் நிலவரம்... தேர்தலில் சென்னையில் நடந்த பேரதிசயம்... வாரிக்குவிக்கும் மக்கள்...!
இதில் ஆண் வாக்காளர்கள் 13,65,763 பேரும், பெண் வாக்காளர்கள் 14,64,344 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 829 பேரும் அடங்குவர். இந்த எண்ணிக்கை ஏப்ரல் மாதத்தில் மேலும் சில புதுப்பிப்புகளுக்குப் பிறகு 28.93 லட்சமாக உயர்ந்திருந்தது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் சென்னையின் 16 சட்டமன்ற தொகுதிகளில் 24 லட்சத்திற்கும் அதிகமானோர் வாக்கு செலுத்தி இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அதே சமயத்தில் 4,71,319 பேர் வாக்கு செலுத்தவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரும்பு ஜூஸ் சாப்புடுறீங்களா?!! ஆட்டோ சவாரி போலாமா?! சைதாப்பேட்டையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிர வாக்குசேகரிப்பு!