தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பீகாரில் நடத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக பேசினார். முன்னர் பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 65 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டதாகவும், இப்போது 3.66 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். அவை தகுதியற்ற வாக்காளர்களின் பெயர்கள் என்றும் யாருக்காவது ஏதேனும் புகார் இருந்தால், அவர்கள் மாவட்ட நீதிபதியிடம் மேல்முறையீடு செய்யலாம் எனவும் தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சியர் மட்டத்தில், அந்தப் பட்டியல் ஒவ்வொரு அரசியல் கட்சியின் மாவட்டத் தலைவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தேதிக்கு இன்னும் பத்து நாட்கள் வரை அவகாசம் உள்ளது என்றும் கூறினார்.

எந்தவொரு நபருக்கோ அல்லது எந்தவொரு அரசியல் கட்சிக்கோ தகுதியான வாக்காளர் விடுபட்டுள்ளதாகவோ அல்லது தகுதியற்ற வாக்காளரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருப்பதாகவோ ஏதேனும் கவலைகள் இருந்தால், அவர்கள் தங்கள் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளை தாக்கல் செய்யலாம் என்றும் கூறினார். பெறப்பட்ட கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் ERO மட்டத்தில் தீர்க்கப்படும் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: பீகார் சட்டமன்றத் தேர்தல்… அதி முக்கிய அறிவிப்பு வெளியீடு…!
செலவு வரம்புகளைப் பொறுத்தவரை, தேர்தல் ஆணையத்தால் வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன என்றும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு செலவு பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளார், அவர் வருவாய் சேவைகளைச் சேர்ந்தவர் மற்றும் செலவுக் கணக்குகளை வைத்திருப்பார்., நீங்கள் எந்த வகையான வேட்பாளராக இருந்தாலும், ஆணையம் நிர்ணயித்த நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழகத்தில் 42 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து... தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை...!