அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு தொகுதிகளுக்கு சென்று அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து காஞ்சிபுரத்தில் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார். உத்திரமேரூர் பாமக வேட்பாளர் மகேஷ் குமார் மற்றும்
காஞ்சிபுரம் அதிமுக வேட்பாளர் சோமசுந்தரம் ஆகியோரை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி வாக்கு சேகரித்தார். அதிமுக பெரும்பான்மையை நிரூபித்தபோது திமுகவினர் ரகளை செய்ததாகவும், இப்போது அதிமுக கூட்டணி 210 இடங்களை வெற்றி பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். திமுகவில் இணைந்துள்ள ஓ பன்னீர்செல்வம் குறித்து விமர்சனம் செய்தார்.

துணை முதலமைச்சர் என்று அந்தஸ்து கொடுத்து அற்புதமான இலாக்கா கொடுத்தும் கூட்டு சரிகள் செய்ததாகவும் தெரிவித்தார். சட்டையை கிழித்துக்கொண்டு சென்றவர் ஸ்டாலின் என்று விமர்சித்தார். எதிரிகளோடு சேர்ந்து வாக்களித்தவர் ஓபிஎஸ் என்றும் கடுமையாக சாடினார். உண்மையான முகம் மக்களுக்கு தெரிந்து விட்டது எனவும் கூறினார். இது கேவலம் அல்லவா என்று கடுமையாக சாடியுள்ளார்.
இதையும் படிங்க: அது திமுக இல்ல.. கருணாநிதி முன்னேற்ற கழகம்..! பரப்புரையில் விளாசிய EPS..!
ஒரு கட்சிக்கு தலைமை தாங்கி இருந்து முதலமைச்சர் என்ற அடையாளத்தை கொடுத்து இங்கு இருக்கும் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் ஒருங்கிணைப்பாளர் என்ற அடையாளத்தை கொடுத்தும் கூட அந்த மனிதனுக்கு ஆசை அடங்கவில்லை என்று ஓபிஎஸ்ஐ சாடினார். தீய சக்தி திமுகவோடு சேர்ந்து விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். வெட்கம், மானம் இல்லையா என்று கேட்டுள்ளார். திமுகவின் பி டீமாக ஓபிஎஸ் செயல்பட்டதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மகளிரை அவமதிக்கிறது அதிமுக..!! EPS மன்னிப்பு கேட்கணும்..! திமுக பெண் நிர்வாகிகள் கொந்தளிப்பு..!