தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வாக்குறுதி படி முழு பயிர் கடனையும் தள்ளுபடி கோரி விவசாயிகள் தலையில் முக்காடு போட்டு திருவோடு ஏந்தி பிச்சை எடுத்து கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே போராட்டம் நடத்தி உள்ளனர். தமிழக வெற்றிக் கழக தேர்தல் அறிக்கையில், 5 ஏக்கருக்குள் நிலம் வைத்துள்ள விவசாயிகள், கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்ததாக கூறி கூறியுள்ளனர்.
5 ஏக்கருக்கு மேல் வைத்துள்ள விவசாயிகளின் பயிர்க்கடன், 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என, வாக்குறுதி அளிக்கப்பட்டது. வாக்குறுதிப்படி, இந்த அரசின் முதல் பட்ஜெட் அறிக்கையிலேயே, விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யும் அறிவிப்பை வெளியிட வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

பொய் வாக்குறுதிகளை வழங்கி, விவசாயிகளுக்கு நம்பிக்கையூட்டி, இப்போது அரைகுறையாக எந்த விவசாயிக்கும் பயனளிக்காத வகையில், பகுதி பயிர்க்கடன் தள்ளுபடி செய்திருப்பது, விவசாயிகளுக்கு இழைக்கப்படும் பச்சை துரோகம் என்றும் கூறினர்.
இதையும் படிங்க: "பத்தல..! பத்தல"..! பயிர்க்கடன் தள்ளுபடி..! சாட்டையடித்து விவசாயிகள் போராட்டம்..!!
மேலும் தமிழ்நாடு அரசு அறிவித்த கடன் தள்ளுபடியால் விவசாயிகளுக்கு எந்த பலனும் இல்லை என்று தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் தலையில் முக்காடு போட்டு திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தமிழ்நாடு அரசை கண்டித்து முழக்கமிட்டனர். தமிழக வெற்றி கழகம் தேர்தல் வாக்குவதில் கொடுத்தவை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
இதையும் படிங்க: “பிள்ளைகளுக்கு பீஸ் கட்ட முடியல...” - முதலமைச்சர் விஜய்க்கு எதிராக ஒன்றிணைந்த விவசாயிகள்... தமிழகமே பரபரப்பு...!