சென்னை சைபர் குற்றப்பிரிவு போலீசார், மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக ஒரு யூடியூப் சேனலில் அவர் தெரிவித்த கருத்துகள் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இருந்ததாக புகார் எழுந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 27, 2025 அன்று கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் ஜோசப் விஜய் நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இதில் குழந்தைகள் உட்பட பலர் பலியானனர். இந்தத் துயரச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டது. தற்போது அந்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இரு நாள்களுக்கு முன்பு ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் நக்கீரன் கோபால் கரூர் சம்பவத்தைப் பற்றி சில சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்தார். சம்பவ நேரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் அங்கிருந்து ஓடிவிட்டதாகவும், அந்தச் சம்பவத்தைத் தனது ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கான காட்சிகளாகப் பயன்படுத்த முயற்சித்ததாகவும் அவர் குறிப்பிட்டதாகக் கூறப்படுகிறது. இந்தப் பேச்சுகள் முதல்வர் மீது அவதூறு செய்ததாகவும் பொது அமைதியைச் சிதைக்கும் வகையில் இருந்ததாகவும் புகார் எழுந்தது.
இதையும் படிங்க: #BREAKING உதயநிதிக்கு அடுத்தடுத்து பேரதிர்ச்சி... தஞ்சையில் தவெக மகளிர் அணி தரமான சம்பவம்...!

இதுதொடர்பாக சம்பத்குமார் என்பவர் சென்னை பெருநகர காவல்துறையின் தெற்கு மண்டல சைபர் குற்றப்பிரிவில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் நக்கீரன் கோபால் மீது பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். வீடியோ உள்ளடக்கத்தையும் சமூக ஊடகங்களில் பரவிய பொருட்களையும் ஆய்வு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
கரூர் சம்பவம் இன்னும் பொதுமக்களிடையே உணர்ச்சிகளைத் தூண்டும் நிகழ்வாகத் தொடர்வதால், இதுபோன்ற கருத்துகள் கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற கவலையும் எழுந்துள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: முதல் பட்ஜெட்டுடன் களமிறங்கும் தவெக அரசு..!! வெளியாகுமா புதிய அறிவிப்புகள்? எதிர்பார்ப்பில் தமிழகம்..!!