பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் மெட்ரோ ரயிலில் நேற்று மாலை நடந்த கத்திக்குத்து தாக்குதலில் மூன்று பெண்கள் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நகரின் மத்திய பகுதியில் உள்ள லைன் 3 மெட்ரோவில் நிகழ்ந்தது. மேலும் தாக்குதல் நடத்திய சந்தேக நபரை போலீசார் விரைவாக கைது செய்தனர்.

இந்த தாக்குதல் சம்பவம் நேற்று மாலை 4.15 முதல் 4.45 மணிக்குள் நடந்தது. ரெபுப்ளிக் (République), ஆர்ட்ஸ் எட் மெட்டியர்ஸ் (Arts et Métiers), ஒபேரா (Opéra) ஆகிய மூன்று நிலையங்களில் தொடர்ச்சியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. ஒரு ஆண் கத்தியை எடுத்து பெண்களை தாக்கியதாக போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து காயமடைந்த பெண்கள் உடனடியாக தீயணைப்பு படை மற்றும் அவசர ஊர்தி சேவையினரால் சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மூன்று பெண்களின் உயிருக்கும் ஆபத்து இல்லை என்று மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
இதையும் படிங்க: பொங்கலுக்கு வேட்டி, சேலை உண்டா? ரொக்கம் எவ்வளவு? புதுச்சேரி அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
இந்த தாக்குதலுக்கு பிறகு சந்தேக நபர் லைன் 8 மெட்ரோவில் தப்பி ஓடினார். ஆனால், மெட்ரோவின் கண்காணிப்பு கேமரா பதிவுகள் மற்றும் அவரது மொபைல் போனின் ஜியோலொகேஷன் தகவல்களை பயன்படுத்தி போலீசார் அவரை விரைவாக கண்டுபிடித்தனர். வால்-டி-ஓய்ஸ் (Val-d’Oise) பகுதியில் உள்ள சார்செல்லெஸ் (Sarcelles) என்ற இடத்தில் அவரது வீட்டில் அவர் கைது செய்யப்பட்டார்.
போலீசார் விசாரணையில் பிடிபட்ட நபர் 25 வயதுடையவர், அவர் மாலி நாட்டைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. ஏற்கனவே அவர் சொத்து சேதம் உள்ளிட்ட சிறு குற்றங்களுக்காக போலீசார் விசாரணையில் இருந்தார். ஆனால் தீவிரவாத தொடர்பு இல்லை என்று போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பாரிஸ் போலீஸ் தலைவர் பாட்ரிஸ் ஃபோர், "மூன்று மணி நேரத்துக்குள் சந்தேக நபரை கைது செய்தது எங்கள் குழுவின் திறமைக்கு சான்று" என்று அவர் கூறினார். இந்த சம்பவம் ஆண்டு இறுதி கொண்டாட்டங்கள் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் நிகழ்ந்ததால் பாரிஸ் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.

மெட்ரோவில் கூடுதல் பாதுகாப்பு படையினர் பணியமர்த்தப்பட்டனர். சம்பவத்திற்கு பிறகு இரண்டு மணி நேரத்தில் லைன் 3 இயல்பு நிலைக்கு திரும்பியது. பாரிஸ் மெட்ரோ போன்ற பொது போக்குவரத்து இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. மேலும் இந்த தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: போலி வெறிநாய்க்கடி தடுப்பூசி!! இந்தியாவில் அவலம்! ஆஸ்திரேலியா சுகாதாரத்துறை வார்னிங்!