ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் ஷாலினி என்ற 12 ஆம் வகுப்பு மாணவி அரசு பள்ளியில் பயின்று வந்துள்ளார். அவரை சேரல் கோட்டையைச் சேர்ந்த முனிராஜ் என்பவன் ஒரு தலைப்பட்சமாக காதலித்து வந்ததாக தெரிகிறது. தொடர்ந்து மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்து வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. மாணவி பள்ளிக்குச் செல்லும் வழியில் வழிமறித்து தன்னை காதலிக்க சொல்லி தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார் முனிராஜ். அவரின் காதலை ஏற்க மாணவர் ஷாலினி மறுத்ததாக தெரிகிறது. மாணவியை தொடர்ந்து காதல் தொந்தரவு கொடுத்து வந்த முனிராஜ் வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளார்.
காதலை ஏற்காமல் பேச மறுத்த நிலையில் பள்ளிக்கு சென்ற 12 ஆம் வகுப்பு மாணவி ஷாலினியை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். கழுத்து மற்றும் வயிற்று பகுதியில் மாணவியை கத்தியால் குத்திய நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது மருத்துவர்கள் சோதித்து பார்த்து ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

காதலிக்க மறுத்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை கத்தியால் குத்தி கொன்ற முனிராஜ் என்பவனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசுப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவிக்கு தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து வந்த நிலையில் கத்தியால் குத்தி கொன்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது.
இதையும் படிங்க: எங்க புள்ளைய கொன்னுட்டானே பாவி... உறவினர்கள் போராட்டம்... முற்றுகை..!
இந்த நிலையில், மாணவியின் உடல் வைக்கப்பட்டுள்ள இராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் உறவினர்கள் குவிந்து வருகின்றனர். மாணவியை வயிறு மற்றும் கழுத்தில் குத்தி கொலை செய்த முனிராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். துறைமுகம் காவல் நிலையத்தில் குவிந்த மாணவியின் பெற்றோர் முற்றுகை போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அவன சும்மா விட கூடாது என்றும் காவு குடுக்கணும்.. அப்ப தான் எங்க பிள்ளை ஆத்மா சாந்தியடையும் என்றும் உறவினர்கள் ஆவேசமாக கூறினார்கள். துடித்து துடித்து எங்கள் பிள்ளையின் உயிர் போய் இருப்பதாகவும் வேதனையை வெளிப்படுத்தினர்.
இதையும் படிங்க: #BREAKING: துரத்தி துரத்தி காதல் தொல்லை… 12 ஆம் வகுப்பு மாணவியை குத்திக் கொலை செய்த கொடூரம்…!