தங்கம் விலை சமீபகாலமாக ஏற்ற இறக்கத்தில் உள்ளது. 70 ஆயிரம் ரூபாயை கடந்து ஒரு சவரன் தங்கம் விற்பனை செய்யப்படுவது ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களை கவலை அடையச் செய்துள்ளது. அது மட்டுமில்லாமல் தங்கம் வாங்க வேண்டும் என்ற கனவையே இந்த விலையேற்றம் கலைத்து விடுகிறது. ஒரு சில நாட்களில் தங்கம் விலை குறைந்தாலும் கடந்த சில நாட்களாகவே விலை ஏறுமுகமாகவே இருக்கிறது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை மூன்று நாட்களில் 1,120 ரூபாய் உயர்ந்த நிலையில், ஒரு சவரன் இன்று 73 ஆயிரத்து 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது நடுத்தர மக்களை பெரும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

நேற்று 22 காரட் தங்கம் கிராமுக்கு 55 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 9,075 ரூபாய்க்கும், சவரனுக்கு 440 உயர்ந்து 72,600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு 65 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,140க்கும், சவரனுக்கு ரூ.520 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.73,120க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல 18 காரட் தங்கம் கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் 7,530 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.60,240க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், வெள்ளி விலை அதிரடியாக கிராமுக்கு 4 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.125க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,25,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: குறி வச்சா இரை விழும்! அசத்தலான தொழில்நுட்பத்தில் அஸ்திரா ஏவுகணை.. கெத்து காட்டும் பாதுகாப்பு படை..
இதையும் படிங்க: கம்பீர செஞ்சிக்கோட்டை... யுனெஸ்கோவின் உலக புராதான சின்னமாக அறிவிப்பு!