திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடி பெருமாள்புரம் பகுதியில் வசித்து வருபவர் பாலகிருஷ்ணன். இவர் உடன்குடி பஜாரில் நகை பட்டறை தொழில் வைத்து நடத்தி வருகிறார்.
ஊரில் உள்ள உச்சிமாகாளி அம்மன், பட்டறை அம்மன் கோவில் கமிட்டி தலைவராகவும் உள்ளார். மேலும், அந்த கோவிலுக்கு சொந்தமான காலி இடத்தை பயன்படுத்துவது தொடர்பாக அதே ஊரை சேர்ந்த சமூக வலைதள பிரபலம் ஜிபி முத்து என்பவருக்கும் ஊர் மக்களுக்கும் இடையே பிரச்சனை இருந்து வருகிறது.
இந்த கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் முதல் செவ்வாய் கிழமை கொடை நடத்துவது வழக்கம். தற்போது கோவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் கட்டுமான பணிகள் சிறப்பாக நிறைவேற வேண்டி கடந்த 19.7.2026 ம் தேதி இரவு சிறப்பு பூஜை நடத்தியுள்ளனர். இதில் ஊர்மக்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: இந்திய மாணவர்களுக்கு இடியாய் இறங்கிய செய்தி... அமெரிக்க கனவில் மண்ணைப் போட்ட டிரம்ப்...!
பூஜை நடைபெற்று கொண்டிருக்கும் போது ஜிபி முத்து தனது வீட்டின் முன்பு மாந்திரீக பூஜை நடத்துவதாக குற்றம் சாட்டி தகராறில் ஈடுபட்டுள்ளார். தகராறு கைகலப்பாக மாறியது.
இதையடுத்து குலசேகரபட்டினம் போலீசார் இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 19/7/2026 அன்று கோவிலில் நடைபெற்ற பூஜையை, மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் மாந்திரீக பூஜை நடத்துவது போன்று சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரல் ஆகியது.
இதையடுத்து உச்சினிமாகாளி அம்மன் கோவில் கமிட்டி தலைவர் பாலகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் குலசேகரப்பட்டணம் போலீசார், ஜிபி முத்து மீது மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் தீய எண்ணத்துடன் மத நம்பிக்கை அவமதிக்கும் வகையில் பொம்மைகளை வைத்து மாந்திரீக பூஜை செய்ததாக சமூக வலைதளங்களில் ஊர் மக்களை அவமதிக்கும் வகையிலும், ஊர் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் வீடியோ வெளியிட்டதாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை...எவ்வளவு தெரியுமா?