ஆபரேஷன் சிந்தூர் என்பது இந்திய ஆயுதப் படைகளால் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடத்தப்பட்ட ஒரு துல்லியமான, உயர் தொழில்நுட்ப இராணுவ நடவடிக்கையாகும். இந்த நடவடிக்கை, ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பகல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக தொடங்கப்பட்டது. இந்தத் தாக்குதலில் 25 இந்தியர்கள் மற்றும் ஒரு நேபாள குடிமகன் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு உத்தியில் ஒரு முக்கிய திருப்புமுனையாகக் கருதப்படும் இந்த நடவடிக்கை, தேசிய பாதுகாப்பு மற்றும் மூலோபாயத் திறனை உலகிற்கு வெளிப்படுத்தியது.
ஜம்மு காஷ்மீரின் பகல்காம் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில், பாகிஸ்தானை அடிப்படையாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பு 26 சுற்றுலாப் பயணிகளை மத அடிப்படையில் பிரித்து கொடூரமாகக் கொலை செய்தது. இந்த அமைப்பு லஷ்கர்-இ-தொய்பாவின் ஒரு கிளையாக செயல்படுவதாக இந்தியா குற்றம் சாட்டியது. பாகிஸ்தானின் தொடர்ச்சியான மறுப்பு மற்றும் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை எடுக்க மறுத்தது இந்தியாவை உறுதியான மற்றும் துல்லியமான பதிலடி நடவடிக்கைக்கு தூண்டியது.

இதன் விளைவாக, ஆபரேஷன் சிந்தூர் மே 7 அன்று தொடங்கப்பட்டது, இது இந்தியாவின் பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையை வெளிப்படுத்தியது. இந்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர் குறித்து பாகிஸ்தான் அமைச்சர் சர்ச்சை கருத்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING: மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்… இந்திய அணி அபார வெற்றி... சுருண்டது பாகிஸ்தான்...!
இந்தியா பாகிஸ்தானுடைய மீண்டும் போர் ஏற்பாடுமா என்ற கேள்விக்கு பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். மீண்டும் போர் வந்தால் முன்பை விட சிறந்த முடிவை அடைவோம் என்றும் இந்தியா - பாகிஸ்தான் இடையே மீண்டும் போர் ஏற்படுவதை மறுக்க முடியாது என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: #BREAKING: ஆசியக் கோப்பை இறுதிப்போட்டி… இந்திய அணி த்ரில் வெற்றி! ஆட்டம் கண்ட பாகிஸ்தான்...!