×
 

பாக்., முகத்திரையை கிழித்து எறியுங்கள்.. ஜப்பானில் இந்திய எம்.பிக்கள் குழு ஆவேசம்..!

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்திற்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது என ஜப்பான் சென்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ் எம்பி அபிஷேக் பானர்ஜி ஆவேசமாக தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய  தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. இந்த ஆபரேஷன் சிந்துார் குறித்து விளக்க, அனைத்து கட்சி எம்பிக்கள் குழு உலக நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது. ஐக்கிய ஜனதா தளம் எம்பி சஞ்ஜய் ஜா தலைமையிலான எம்பிக்கள் குழு ஜப்பானில் 3வது நாளாக அந்நாட்டு எம்பிக்கள், அதிகாரிகளை சந்தித்தனர். பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தனர். 

இந்திய தாக்குதலில் பலியான பாக்., பயங்கரவாதிகளின் உடல்களுக்கு அந்நாட்டு ராணுவ ஜெனரல், அரசு அதிகாரிகள் அஞ்சலி செலுத்திய போட்டோவை ஆதாரமாக காட்டினர். சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின் லேடன் பாகிஸ்தானில் பதுங்கியருந்ததையும், அங்கு வைத்து தான் அவனை அமெரிக்க படை கொலை செய்ததையும் விளக்கினர். லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது உள்ளிட்ட பயங்கரவாத இயக்கங்களின் செயல்பாடு, அவற்றுக்கு பாகிஸ்தான் ராணுவம் பயிற்சி அளிப்பது பற்றியும்,

இதையும் படிங்க: பாக்., இத பேசலமா? ஐநா சபையில் காரசார விவாதம்.. பாகிஸ்தானை லெப்ட் & ரைட் வாங்கிய இந்தியா..!

இந்தியாவில் இதுவரை நடந்த பயங்கரவாத தாக்குதல்கள், அதில் பலியான அப்பாவி பொதுமக்கள், தாக்குதல்களில் பாகிஸ்தானின் பங்கு குறித்தும் எம்பிக்கள் குழு விளக்கியது. இதுகுறித்து, வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி அபிஷேக் பானர்ஜி கூறியதாவது: இந்தியாவின் நட்பு நாடு ஜப்பான். அதனால் தான் இங்கிருந்து எங்கள் பயணத்தை துவங்கி உள்ளோம். மேலும் பல நாடுகளுக்கு நாங்கள் பயணிக்க உள்ளோம். 

நான் எதிர்க்கட்சியை சேர்ந்தவன். எங்கள் குழுவில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அனைத்து தரப்பு எம்பிக்களும் இடம் பெற்றுள்ளனர். தேசம் என்று வரும்போது நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம். இதில் இரு வேறு கருத்தில்லை. இந்தியா மீதான பயங்கரவாத தாக்குதல் குறித்து உரிய ஆதாரங்களை எடுத்து வந்துள்ளோம். பயங்கரவாதிகளின் உடல்களுக்கு பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் அஞ்சலி செலுத்திய போட்டோக்களை நாங்கள் வெளியிட்டுள்ளோம். 

இங்கு வசிக்கும் இந்தியர்கள் இவற்றை சோசியல் மீடியாக்கள் மூலம் வெளிநாட்டவருக்கு பகிருங்கள். பாகிஸ்தானின் முகத்திரையை கிழித்து எறியுங்கள். இங்கு வசிக்கும் இந்தியர்களுக்கு நாட்டுப்பற்று மிக அதிகம். வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், உணவு, உடை, கலாசாரத்தில் தேசிய தன்மையை அதிகம் வெளிப்படுத்துகின்றனர். எனவே, பயங்கரவாதத்திற்கு எதிரான நம் நாட்டின் நடவடிக்கைகளை எடுத்து சொல்லுங்கள். 

பஹல்காம் தாக்குதலுக்கு பின் போதிய கால அவகாசம் கொடுத்தும், பாகிஸ்தான் அரசு பயங்கரவாதிகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் தான் நம் படைகள் தாக்குதல் நடத்த வேண்டியிருந்தது. நாம் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினோம். ஆனால், பாகிஸ்தான் ராணுவம் நம் மக்களை தாக்கியது. அதனால் தான் பாகிஸ்தான் ராணுவம் மீதும் நாம் தாக்குதல் நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டோம். இது முற்றிலும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை. பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்திற்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது என்றும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: சாரே! கொல மாஸு! இறங்கி அடிக்கும் இந்தியா.. பயத்தில் பாக்., அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளை தெறிக்கவிட்ட ஜெய்சங்கர்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share