பாக்., இத பேசலமா? ஐநா சபையில் காரசார விவாதம்.. பாகிஸ்தானை லெப்ட் & ரைட் வாங்கிய இந்தியா..!
பொதுமக்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் பாகிஸ்தான் தலைவர்கள். இவர்கள் பொதுமக்கள் கொல்லப்படுவதாக பேசுவதில் நியாயமில்லை என இந்தியா வாதிட்டது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. இந்த ஆபரேஷன் சிந்துார் குறித்து விளக்க, அனைத்து கட்சி எம்பிக்கள் குழு உலக நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது. இதற்கிடையே இந்தியாவை காபி அடித்து பாகிஸ்தானும் குழு ஒன்றை உருவாக்கி உள்ளது. அந்த குழு பாகிஸ்தானின் பொய் மூட்டைகளை உலக நாடுகளிடம் கட்டவிழ்த்து வருகிறது. பாகிஸ்தானில் மக்கள் குடியிருப்புகளை இந்தியா தாக்கியதாகவும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் அளித்ததாகவும் இந்தியா மீது பாகிஸ்தான் அபாண்ட குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறது.
இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நியூயார்க்கில் நடந்தது. இதில், பேசிய பாகிஸ்தான் பிரதிநிதி, போர் என்ற பெயரில் பொதுமக்கள் கொல்லப்படுகின்றனர். ஆயுதங்கள் பயன்படுத்தி தாக்குதல் நடத்தும் போது, பொதுமக்கள் கொல்லப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என பேசினார். ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கையின் போது கொல்லப்பட்ட பயங்கரவாதிகளை, பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அந்நாடு கூறி வரும் நிலையில், பாகிஸ்தான் பிரதிநிதியின் இந்த பேச்சுக்கு, ஐநாவுக்கான இந்திய துாதர் பரவதனேனி ஹரீஸ் பதில் அளித்து பேசினார்.
இதையும் படிங்க: சாரே! கொல மாஸு! இறங்கி அடிக்கும் இந்தியா.. பயத்தில் பாக்., அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளை தெறிக்கவிட்ட ஜெய்சங்கர்..!
பாகிஸ்தான் ஆதரவுடன் இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இது பல ஆண்டுகளாக தொடர்கிறது. 2008ல் மும்பையில் நடத்தப்பட்ட பயங்ரவாத தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.அதைத் தொடர்ந்து சமீபத்தில் பஹல்காமில் நடந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இவை அனைத்தும் பாக் ஆதரவு பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டவை.
இப்படிப்பட்ட பயங்கவரவாதிகளை குறிவைத்து இந்தியா ஆபரேஷன் சிந்துார் திட்டத்தை செயல்படுத்தியது. அதில் பலியான பயங்கரவாதிகள் உடலுக்கு பாக்., ராணுவம், அரசு உயர் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். அவர்களுக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டது. இப்படிப்பட்ட நாடு தான் பாகிஸ்தான். இதுவே அவர்களின் பயங்ரவாத ஆதரவு செயல்பாட்டுக்கு ஆதாரம்.
பொதுமக்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள், பொதுமக்கள் கொல்லப்படுவதாக பேசுவதில் நியாயமில்லை. பாகிஸ்தான் சமீபத்தில் இந்திய எல்லையில் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டனர். அவர்கள் அனைவரும் அப்பாவி பொதுமக்கள். 80 பேர் காயம் அடைந்தனர். குருத்துவாராக்கள், கோயில்கள், கான்வென்ட்கள், மருத்துவ மையங்கள் ஆகியவையே அவர்களின் இலக்காக இருந்தது.
இப்படிப்பட்டவர்கள் பொதுமக்கள் பாதிக்கப்படுவது குறித்து பேசலாமா? சர்வதேச நாடுகளுக்கு அச்சுறுத்தலாக உள்ள பயங்கரவாதத்தை வேரறுக்க உலக நாடுகள் ஒன்றுபட வேண்டும். ஆயுத தாக்குதல் மூலம் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு இந்தியா துணை நிற்கும் என்றார். ஐநா கவுன்சில் கூட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக குற்றச்சாட்டை முன் வைத்த பாகிஸ்தானுக்கு இந்திய துாதரர் சரியான பதிலடி கொடுத்தார்.
இதையும் படிங்க: ரஷ்யாவில் தரமான சம்பவம்.. பாக்., முகத்திரையை டார் டாராக கிழித்த கனிமொழி..!