வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு ›

ஓய மாட்டோம்… 6வது நாளாக தொடரும் ஆசிரியர்கள் போராட்டம்… DPI அலுவலகம் முற்றுகை…!

நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் நீண்டகாலமாக "சம வேலைக்கு சம ஊதியம்" என்ற கோரிக்கையை முன்வைத்து போராடி வருகின்றனர். இந்தப் பிரச்னை கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் ஒரு ஊதிய முரண்பாட்டால் உருவானது. 2009ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் தேதிக்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கும், ஜூன் 1ஆம் தேதிக்குப் பிறகு சேர்ந்த ஆசிரியர்களுக்கும் இடையே அடிப்படை ஊதியத்தில் குறிப்பிடத்தக்க வித்தியாசம் உள்ளது.

ஒரே மாதிரியான பணி, ஒரே கல்வித் தகுதி இருந்தும், இந்த வேறுபாடு இருப்பதாக ஆசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இது ஏறத்தாழ 20,000 ஆசிரியர்களைப் பாதித்துள்ளது.இந்த முரண்பாடு ஊதிய ஆணைய மாற்றங்களால் ஏற்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் "சம வேலைக்கு சம ஊதியம்" என்ற தீர்ப்புக்கு எதிரானது என ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர். இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் (SSTA) இந்தக் கோரிக்கையை முன்னிறுத்தி பல ஆண்டுகளாக போராட்டங்களை நடத்தி வருகிறது.

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் ஆசிரியர்கள் போராடியபோது, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரான மு.க. ஸ்டாலின் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். 2021ஆம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையில் (வரிசை எண் 311) இந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவோம் என உறுதியளிக்கப்பட்டது. ஆனால், ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகியும் இது நிறைவேற்றப்படவில்லை என்பதே ஆசிரியர்களின் முக்கிய குற்றச்சாட்டு.

இதையும் படிங்க: போலீஸ் எங்கள சித்திரவதை செய்றாங்க… 5வது நாளாக போராடும் இடைநிலை ஆசிரியர்கள்…!

தொடர்ந்து இடைநிலையாசிரியர்கள் போராடி வருகின்றனர். நேற்றைய தினம் எழும்பூரில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகத்தின் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி பி ஐ அலுவலகம் அருகே ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். டிபிஐ வளாகத்தை முற்றுகையிட்டு இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் ஆறாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதையும் படிங்க: சம வேலைக்கு சம ஊதியம்… 2 வது நாளாக தொடரும் போராட்டம்… இடைநிலை ஆசிரியர்கள் கைது…!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள் ›

தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी