அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி... விஜய்யை பார்க்கச் சென்ற 50 பேர் மயக்கம்... அடுத்தடுத்து மருத்துவமனைகளில் அனுமதி...!
தேர்தல் பிரச்சாரத்திற்காக திருச்சி வந்த த.வெ.க தலைவர் விஜயை காண ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் குவிந்தனர். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 50 பேர் மயக்கமடைந்த நிலையில் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
த.வெ.க தலைவர் விஜய்யின் முதல் பிரச்சாரம் இன்று திருச்சியில் தொடங்கி உள்ளது. இதனையொட்டி, சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக அவர் திருச்சி வந்தடைந்தார். திருச்சி விமான நிலையத்தில் அவரை பார்ப்பதற்காக, வெளியே ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்திருந்தனர். இதில், பலர் தடுப்புகளை தாண்டி செல்ல முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக பிரச்சார வாகனத்தில் சென்ற விஜய்-க்கு தொண்டர்கள், பொதுமக்கள் மலர்தூவி வரவேற்றனர். பாலக்கரை வழியாக மரக்கடை பகுதிக்கு வரும் விஜய், அங்கு மக்கள் மத்தியில் உரையாற்றவுள்ளார். விஜய்யை பார்க்க ஏராளமான தொண்டர்கள் குவிந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
வாகனத்தைச் சூழ்ந்துள்ள தொண்டர்களால் விமான நிலையத்தில் இருந்து மரக்கடை பகுதிக்கு விஜயின் பிரச்சார வாகனம் ஆமை வேகத்தில் ஊர்ந்து வருகிறது. கிட்டத்தட்ட 4 மணி நேர தாமத்துடன் மரக்கடை பகுதிக்கு விஜய் வந்துள்ள நிலையில், வெயிலால் பாதிக்கப்பட்டு அடுத்தடுத்து தொண்டர்கள் மயக்கமடைந்து வருகின்றனர். மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி அவதிக்குள்ளாகும் தொண்டர்களும் மயக்கமடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: செக் வைத்த போலீஸ்... உடைத்தெறிந்த விஜய்... திருச்சியை அதிர விட்ட தரமான சம்பவங்கள்...!
தற்போதைய நிலவரப்படி மரக்கடை பகுதியில் காத்திருந்த தொண்டர்களின் 50 பேர் மயக்கமடைந்துள்ளனர். இதில் பலருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு நார்மல் நிலைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், 10 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவிற்கு பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: #BREAKING விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பா? - நாகை எஸ்.பி. பகிர்ந்த பரபரப்பு தகவல்...!