×
 

சிங்கப்பூர் கப்பல் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!! ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க ஐநா தற்காலிக தடை!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிங்கப்பூர் கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்திய சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியில் சிங்கப்பூர் கொடியுடன் சென்ற சரக்கு கப்பல் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்திய சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா-ஈரான் இடையே 4 மாதங்கள் நீடித்த போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான சில நாட்களுக்குள்ளாகவே இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.

அண்மையில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. இதில் வளைகுடா பகுதியில் அமெரிக்க படைகளை விலக்குவது, ஹார்முஸ் ஜலசந்தியில் 60 நாட்களுக்கு கட்டணமின்றி பாதுகாப்பான கப்பல் போக்குவரத்தை உறுதி செய்வது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. 

இந்த ஒப்பந்தத்துக்குப் பிறகு நேற்று முன்தினம் இந்திய கப்பல்கள் உள்பட 70க்கும் மேற்பட்ட கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாக கடந்து சென்றன. இந்நிலையில் தான் நேற்று ஓமனின் தஹித் கடற்கரை அருகே சிங்கப்பூர் கொடியுடன் சென்ற சரக்கு கப்பல் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியது.

இதையும் படிங்க: ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கா கடும் தாக்குதல்! இந்திய மாலுமிகள் 3 பேர் பலி!! ஓமனில் பயங்கரம்!

பிரிட்டனின் கடல்சார் வர்த்தக செயல்பாட்டு மையம் வெளியிட்ட தகவலின்படி, தாக்குதலில் கப்பலின் கட்டுப்பாட்டு அறை சேதமடைந்துள்ளது. இருப்பினும், இந்த தாக்குதலில் எந்தவிதமான உயிரிழப்போ, காயமோ ஏற்படவில்லை. சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பெர்சிய வளைகுடாவில் முடங்கியுள்ள கப்பல்களை வெளியேற்றுவதற்காக ஐநாவின் சர்வதேச கடல்சார் அமைப்பு (IMO) கொண்டு வந்த திட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளது. இது உலக பொருளாதாரத்துக்கு பெரும் சவாலாக மாறும் அபாயம் உள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தி உலகின் மிக முக்கிய கச்சா எண்ணெய் போக்குவரத்து பாதையாகும். உலகின் 20 சதவீத எண்ணெய் வழித்தடம் இங்கு வழியாகவே செல்கிறது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் இந்தப் பாதையை நம்பியுள்ளன. தாக்குதல் சம்பவத்தால் மீண்டும் விலை உயர்வு மற்றும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் என அஞ்சப்படுகிறது.

ஈரான் தரப்பில் இந்த தாக்குதல் குறித்து இதுவரை எந்த விளக்கமும் வெளியாகவில்லை. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் இந்த சம்பவத்தைக் கண்டித்துள்ளன. சர்வதேச சமூகம் இந்த பதற்றத்தை உடனடியாக தீர்க்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.

இந்த தாக்குதல் அமெரிக்கா-ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் நிலைத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. வரும் நாட்களில் ஹார்முஸ் ஜலசந்தியில் பாதுகாப்பு நிலை குறித்து புதிய பேச்சுவார்த்தைகள் நடைபெற வாய்ப்பு உள்ளது. உலக நாடுகள், குறிப்பாக எண்ணெய் இறக்குமதியை நம்பியுள்ள இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் இந்த சூழலை உன்னிப்பாக கவனித்து வருகின்றன.

இதையும் படிங்க: ஹார்முஸ் ஜலசந்தி அருகே ஈரானின் ராணுவ தளம்!! வான்வழி தாக்குதல் நடத்திய அமெரிக்கா! போர் பதற்றம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share