×
 

ட்ரம்ப்தான் டார்கெட்.. ஈரானின் மாஸ்டர் ப்ளான்.. நெதன்யாகு பேச்சால் பற்றி எரியும் சர்ச்சை..!

அமெரிக்க அதிபர் டிரம்பை கொல்ல ஈரான் விரும்புகிறது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றம் சாட்டி உள்ளார்.

இஸ்ரேல், ஈரான் மோதலால் மத்திய கிழக்கில் உச்சக்கட்ட பதற்றம் தொற்றி இருக்கிறது. ஈரானின் அணு உற்பத்தி மையங்கள் மற்றும் ராணுவ தளங்களை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன.அணு ஆயுதம் தயாரிப்பதற்கான ஏற்பாட்டில் தீவிரமாக ஈடுபட்டு வந்த ஈரான், தனது அணு உற்பத்தி கூடங்களின் முக்கிய கட்டமைப்புகளை இழந்தது.

அதே போல் ராணுவ தளங்களிலும் மிகப்பெரிய சேதம். கொத்து கொத்தாக வீரர்கள் கொல்லப்பட்டனர். எல்லாவற்றுக்கும் மேலாக ஈரானின் உச்ச தலைவர் கமெனிக்கு அடுத்த இடத்தில் இருக்கும், ஈரானின் அனைத்து வடிவிலான ராணுவத்தின் தலைமை தளபதி முகமது ஹூசைனை இந்த தாக்குதலில் இஸ்ரேல் கொன்று விட்டது. இது தவிர இரண்டு முக்கிய படை பிரிவின் தலைமை தளபதிகளும், 2 முக்கிய அணு விஞ்ஞானிகளும் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

இதை தொடர்ந்து இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்த ஆரம்பித்தது. 100க்கும் அதிகமான ட்ரோன்களை ஏவி விட்டது. அதை இஸ்ரேல் முறியடித்தது. அடுத்த கட்டமாக மிகப்பெரிய தாக்குதல் நடத்த ஈரான் திட்டமிட்டு வருகிறது. இந்த நிலையில் இஸ்ரேல் அட்டாக் குறித்து ஈரானுக்கு டிரம்ப் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க: முக்கிய அணுசக்தி மையத்தை பந்தாடிய இஸ்ரேல்.. இழப்பை ஈடுகட்ட ஈரானுக்கு பல மாதங்கள் ஆகுமாம்..!

அமெரிக்காவுடன் ஈரான் ஒப்பந்தம் போட்டுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் அடுத்ததாக திட்டமிடப்பட்டு இருக்கும் தாக்குதல்கள் இன்னும் கொடூரமானவை. ஒரு காலத்தில் ஈரான் பேரரசு என்று மார்த்தட்டினார்கள். அதை அவர்கள் காப்பாற்ற வேண்டும் என்றால் பேச்சு வார்த்தைக்கு வர வேண்டும். இல்லை என்றால் அடுத்த தாக்குதலில் எதுவும் மிச்சம் இருக்காது என்று ஈரானை டிரம்ப் எச்சரித்தார்.

அதை போல் இஸ்ரேல் மேல் ஈரான் கைவைத்தால் அமெரிக்கா நேரடியாக களம் இறங்கும் என்றும் அதிரடி காட்டினார். ஒப்பந்தம் போட ஈரானுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தேன். ஒப்பந்தம் போட்டாக வேண்டும் என்பதை உறுதியாக கூறினேன். மிகவும் நெருக்கமாக வந்த ஈரான், அதை செய்யாமலேயே போய்விட்டது. நான் அவர்களிடம் ஏற்கனவே சொல்லிவிட்டேன்; இதன் பின்விளைவு எதிர்பார்த்ததை விடவும், ஏற்கனவே சொன்னதை விடவும் மிகவும் மோசமாக இருக்கும் என்றார்.

ஈரானிடம் இருந்து கடுமையான பதிலடி வந்தால் அமெரிக்காவை காக்கவும், இஸ்ரேலை காக்கவும் தயாராக இருக்கிறேன் என்று டிரம்ப் கூறினார். இஸ்ரேலுக்கு மிகப்பெரிய அளவில் பதிலடி கொடுக்க தயாராகி வரும் ஈரானுக்கு டிரம்பின் அதிரடி பேட்டி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரம் இஸ்ரேலுக்கு புதிய சக்தி கிடைத்து இருக்கிறது. ஈரான் மீதான தாக்குதல் இன்னும் முடியவில்லை. இது வெறும் ஆரம்பம் தான். இனி அடுத்தடுத்து தாக்குதல் தொடரும் என்று இப்போது இஸ்ரேல் அறிவித்துள்ளது. இதனால் மத்திய கிழக்கில் உச்சக்கட்ட பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்பை கொல்ல ஈரான் விரும்புகிறது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றம் சாட்டி உள்ளார். ஈரானின் அணு ஆயுத திட்டத்துக்கு அச்சுறுத்தலாக டிரம்ப் இருப்பார் என்பதால் கொல்ல ஈரான் திட்டமிட்டுள்ளது. முதல் எதிரியாக டிரம்புக்கு ஈரான் இலக்கு நிர்ணயித்துள்ளது. அவர் ஒரு நல்ல தலைவர். மற்றவர்கள் அவர்களுடன் பேரம் பேச முயற்சிப்பதை அவர் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளவில்லை.

ஈரானின் அணு சக்தி நடவடிக்கைக்கு இஸ்ரேலின் தாக்குதல் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. ஈரானிடம் அணு ஆயுதம் இருக்க முடியாது. ஈரானால் நாங்கள் உடனடி அச்சுறுத்தை எதிர்கொண்டோம். ஈரான் உலகிற்கு ஏற்படுத்தும் அச்சுறுத்தலை அகற்ற தேவையான அனைத்தையும் செய்ய தனது நாடு தயாராக உள்ளது என நெதன்யாகு கூறினார்.

இதையும் படிங்க: இந்தியா -பாக்., போல ஈரான் - இஸ்ரேல் போரை நிறுத்துவேன்.. ஆட்டத்தை ஆரம்பிக்கும் ட்ரம்ப்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share