எங்கள் மன உறுதியை ரொம்ப சோதிக்காதீங்க!! அமெரிக்காவுக்கு ஈரான் சபாநாயகர் வார்னிங்!
அமெரிக்காவின் அனைத்து நடவடிக்கைகளையும் உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். தளபதிகள் என்ன செய்கின்றனர். வீரர்கள் செய்யும் தவறுகள், அவர்களால் முடியாத விசயங்கள் என படையினரின் செயல்பாடுகளை பார்த்து வருகிறோம்.
மேற்காசியப் பகுதியில் நீடித்து வரும் போர் பதற்றம் நான்காவது வாரத்திலும் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்காவுக்கு எதிராக ஈரான் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் (Mohammad Bagher Ghalibaf) வெளியிட்டுள்ள கருத்துகள் சர்வதேச அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்துள்ளன.
இது தொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “இந்தப் பகுதியில் அமெரிக்காவின் அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் மிக நெருக்கமாக கண்காணித்து வருகிறோம். தளபதிகள் முதல் சாதாரண வீரர்கள் வரை மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலையும் கவனித்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார். மேலும், இஸ்ரேல் பிரதமர் Benjamin Netanyahu குறித்து குறிப்பிடும்போது, “அவரது மாயத்தோற்றங்களுக்கு உங்கள் வீரர்கள் பலியாக வேண்டாம்” என அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
அதோடு, “எங்கள் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் மனவலிமையை சோதிக்க முயற்சிக்க வேண்டாம்” என்றும் முகமது பாகர் காலிபாப் (Mohammad Bagher Ghalibaf) வலியுறுத்தியுள்ளார். இந்த கருத்துகள், போர் சூழ்நிலையை மேலும் பதற்றப்படுத்தும் வகையில் உள்ளதாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையா? அப்படி ஒரு திட்டமே இல்லை! ஈரான் மீண்டும் நெத்தியடி!
கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதற்கு பதிலடியாக, ஈரான் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவற்றின் கூட்டணி நாடுகளின் ராணுவத் தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நீடித்த மோதலின் தாக்கம் உலகளாவிய அளவிலும் உணரப்படுகிறது. குறிப்பாக எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட தடைகள் காரணமாக பல நாடுகளில் பெட்ரோல், டீசல் விலைகள் அதிகரித்துள்ளன. இதனால் விலைவாசி உயர்வு மற்றும் பொருளாதார சிக்கல்கள் தீவிரமடைந்துள்ளன.
மொத்தத்தில், முகமது பாகர் காலிபாப் (Mohammad Bagher Ghalibaf) வெளியிட்டுள்ள இந்த எச்சரிக்கை, மேற்காசியப் பகுதியில் நிலவும் பதற்றத்தை மேலும் அதிகரிக்கக் கூடும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: நீங்களே தனியா பேசிக்கிறீங்க போலயே! அமெரிக்காவை கிண்டல் செய்யு ஈரான்! பேச்சுவார்த்தை மறுப்பு!