×
 

கோர முகத்தை காட்டும் இஸ்ரேல்..! கொத்து கொத்தாக செத்து மடியும் காசா மக்கள்..!

இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 53 ஆயிரத்து 573 ஆக அதிகரித்துள்ளது.

காசா மீது நாள்தோறும் இஸ்ரேல் ராணுவம் நடத்தும் தாக்குதல்களில் கொத்துக்கொத்தாக மக்கள் இறந்து வருகிறார்கள். பள்ளிகள், மருத்துவமனைகள், மக்கள் தங்கி இருக்கும் குடியிருப்பு பகுதிகள் என எதையும் விட்டு வைக்காமல் வான் வழியாக இஸ்ரேல் நடத்தும் தாக்குதலில் அப்பாவிகள் செத்து மடிந்து வருகின்றனர்.

பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டாலும் எதற்கும் அஞ்சமாட்டோம் என இஸ்ரேல் தொட்டபெட்டமாக தெரிவித்து வருகிறது. காசாவுக்கான உதவிகளை இஸ்ரேல் தடுத்து நிறுத்துவதால் காசா மக்கள் நிற்கதியாகி உள்ளனர். இஸ்ரேல் நடத்திவரும் கொடூர தாக்குதலில் இதுவரை 53,573 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இஸ்ரேலின் மூர்க்கத்தனமான தாக்குதல்.. சிதைந்த குழந்தைகள்.. காசா முழுவதும் மரண ஓலம்!

மேலும், ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 688 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் 87 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க: போர் கொடுமை...மரணத்தின் விளிம்பில் 14 ஆயிரம் குழந்தைகள்... ஐ.நா எச்சரிக்கை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share