ட்ரம்ப் சொல்லுறது பொய்.. சண்டையை நிறுத்த கூறி பாக்., கெஞ்சியதாக ரஷ்யாவில் கனிமொழி THUG கமெண்ட்..!
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான சண்டை நிறுத்தத்திற்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கும் சம்பந்தம் இல்லை என ரஷ்யாவில் திமுக கனிமொழி திட்டவட்டமாக கூறினார்.
இந்தியா - பாக்., இடையிலான சண்டை நிறுத்தத்திற்கு தானே காரணம் என, அமெரிக்க அதிபர் டொலான்டு டிரம்ப் செல்லும் இடங்களில் எல்லாம் பேசி வருகிறார். இரு நாட்டு தலைவர்களுடன் நேரடியாக பேசினேன். சண்டையை நிறுத்தாவிட்டால் வர்த்தகம் செய்ய மாட்டேன் என்றேன். என் பேச்சுக்கு கட்டுப்பட்டு இரு நாடுகளும் உடனே சண்டையை நிறுத்தின. இதன் மூலம் மிகப்பெரிய அணு ஆயுத நாடுகள் இடையிலான சண்டையை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டேன் என, டிரம்ப் அடிக்கடி கூறி வருகிறார்.
அமெரிக்க அதிபரின் பேச்சுக்கு இந்திய வெளியுறவு துறை செயலர் விக்ரம் மிஸ்ரி ஏற்கனவே மறுப்பு தெரிவித்தார். ஆபரேஷன் சிந்துார் பற்றி நாட்டு மக்களிடம் பேசிய பிரதமர் மோடி, டிரம்ப்பின் பெயரையே உச்சரிக்காமல், இது முழுக்க முழுக்க இந்தியா - பாக்., இடையிலான பிரச்னை என்பதை உறுதியாகச் சொன்னார். இதே கருத்தை, ஜெர்மனியில் நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் எடுத்துரைத்தார். இந்தியா தரப்பில் தெளிவான விளக்கம் அளித்த பிறகும் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து சொன்னதையே சொல்லி வருகிறார்.
இதையும் படிங்க: பாக்., முகத்திரையை கிழித்து எறியுங்கள்.. ஜப்பானில் இந்திய எம்.பிக்கள் குழு ஆவேசம்..!
இந்நிலையில் ஆபரேஷன் சிந்துார் குறித்து விளக்குவதற்காகவும், பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு நிலைப்பாட்டை தோலுரிக்கவும் ரஷ்யா சென்றுள்ள இந்திய எம்பிக்கள் குழுவினர், இந்தியா - பாக்., சண்டை நிறுத்தத்திற்கான காரணம் குறித்து விளக்கினர். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாகத் தான் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள் மீது இந்தியா தாக்குதல் நடத்திது. அதை தங்கள் மீதான தாக்குதலாக எடுத்துக்கொண்ட பாக்., ராணுவம் இந்திய எல்லைக்குள் தாக்கியது.
குடியிருப்புகள், வழிபாட்டு தலங்கள், ஆஸ்பிடல்களில் பாக்., படை நடத்திய தாக்குதலில் அப்பாவிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாகத்தான் இந்தியாவும் திருப்பி தாக்கியது. பாகிஸ்தானின் விமானப்படை தளங்கள் தகர்க்கப்பட்டதால், வேறு வழியின்றி அந்நாடு சண்டை நிறுத்தத்திற்கு கோரிக்கை விடுத்தது. பாகிஸ்தானுடனான சண்டை நிறுத்தத்திற்கு வேறு எந்த நாடுகளின் தலையீடும் காரணம் அல்ல என, எம்பிக்கள் குழுவினர் கூறியது.
இரு நாடுகள் இடையே அசாதாரண சூழல் நிலுவும் போதும், பிற நாட்டின் தலைவர்கள் சம்பந்தப்பட்ட நாடுகளிடம் பேசுவது வழக்கமே. அந்த வகையில் இந்தியா - பாக்., சண்டையின் போது, பிரதமர் மோடி, ரஷ்ய பிரதமருடன் பேசினார். அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் அப்படித் தான் மோடியுடன் பேசியுள்ளார். ஆனால், சுதந்திரமான இருநாடுகள், தங்களுக்குள் உள்ள பிரச்னைகளுக்கு தாங்களே தான் முடிவு காணும் என நினைப்பதாக திமுக எம்பி கனிமொழி கூறினார்.
பாகிஸ்தானுடனான சண்டை நிறுத்தத்திற்கு அந்நாட்டு ராணுவ தலைமை நம் ராணுவ தலைமையிடம் முறையிட்டதே காரணம். இந்த விவகாரத்தில் உலக தலைவர்களுக்கு நாங்கள் ஏற்கனவே தெளிவான தகவலை கொடுத்துவிட்டோம் என, ரஷ்யாவுக்கான இந்திய துாதர் விஜய் குமார் கூறினார். இதன் மூலம் தனது தலையீட்டால் தான் இந்தியா - பாக்., சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்ததாக கூறி வரும் டிரம்ப்புக்கு சர்வதேச அரங்கில் இந்திய தரப்பில் மீண்டும் சரியான பதிலடி தரப்பட்டுள்ளது.
இந்தியா - பாக்., சண்டை நிறுத்தத்தில் டொனால்டு டிரம்ப்பின் பங்கு என்னவாக இருந்தது என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வரும் நிலையில், அதன் கூட்டணயில் இடம் பெற்றுள்ள திமுக எம்பி கனிமொழி, அரசின் கருத்தை ஆதரிக்கும் வகையில் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பாக்., இத பேசலமா? ஐநா சபையில் காரசார விவாதம்.. பாகிஸ்தானை லெப்ட் & ரைட் வாங்கிய இந்தியா..!