வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
அரசியல் ›

அதிமுகவுக்கு முஸ்லீம்கள் ஓட்டு போடமாட்டாங்க… காரணம் சொல்லும் அப்துல் ஜாபர்..!

பாரதிய ஜனதா கட்சியோடு அதிமுக கூட்டணி வைத்ததனால் முஸ்லிம்கள் நமக்கு வாக்களிக்க மாட்டார்கள் என சிறுபான்மை பிரிவு இணைச்செயலாளர் அப்துல் ஜபார் பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் மலைப்பகுதி அரேப்பாளையத்தில் மே 1 தொழிலாளர் தினத்திற்கான அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர்  செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், மாநில சிறுபான்மை பிரிவு இணைச்செயலாளர் அப்துல் ஜபார் பேசிய பேச்சு, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

அவர் பேசும் பொழுது, வருகின்ற தேர்தலில்  பாரதிய ஜனதா கட்சியோடு கூட்டணி வைக்க வேண்டும் என கூறினோம். ஆனால் நம்முடைய கூட்டணிக்கு முஸ்லிம்கள் ஓட்டு போட மாட்டார்கள். முஸ்லிம்கள் அண்ணா திமுகவிற்கு ஓட்டு போட மாட்டார்கள். நான் ஜமாத்தின் உடைய தலைவர். என் கண்ணால் பார்த்திருக்கின்றேன். 2024 நாடாளுமன்ற தேர்தலில் நாம் பாரதிய ஜனதா கட்சியோடு கூட்டணியில் இல்லை. ஒரு சின்ன முஸ்லிம் கட்சியோடு கூட்டணி வைத்திருந்தாலும் முஸ்லிம்கள் திமுகவிற்கு வாக்களித்தனர். 

இதையும் படிங்க: 93 ஆண்டுகள் கழித்து பிரதமர் மோடி அடித்த சிக்ஸர்.. துள்ளிக் குதிக்கும் எடப்பாடி பழனிச்சாமி!!

இதனைத் தொடர்ந்து செங்கோட்டையன் பேசும் போது 2026 இல் பாரதிய ஜனதா கட்சியோடு கூட்டணி வைத்து போட்டியிடுகின்ற நமக்கு 200 இடங்கள் நிச்சயமாக கிடைக்கும் என்னை பொருத்தவரை சாதாரண தொண்டனாக இருந்து பணியாற்ற தயாராக இருக்கின்றேன் என பேசினார்.

இதையும் படிங்க: திடீரென கட்ஆன கரண்ட்… அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவர் வீட்டில் நடந்த பகீர் சம்பவம்!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள் ›

ஜெகன் மோகன் ரெட்டி வீட்டு திருமணம்: நேரில் வாழ்த்திய முதலமைச்சர் விஜய் மற்றும் த்ரிஷா!தமிழ்நாடு
காசிமேடு மீனவர்கள் உயிரிழப்பு: தவெக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கண்டனம்!தமிழ்நாடு
ஆந்திரக் கடலில் உயிரிழந்த சென்னை மீனவர்கள்: தலா ₹7 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी