ரஷ்யாவின் அடுத்த இலக்கு? விஸ்வரூபம் எடுக்கும் புடின்! நட்பு நாடுகளை அலர்ட் செய்யும் நேட்டோ!
''ரஷ்யாவின் அடுத்த இலக்கு நாங்கள் தான். 5 ஆண்டுகளுக்குள் நேட்டோவிற்கு எதிராக ராணுவ பலத்தை பயன்படுத்த ரஷ்யா தயாராகிவிடும்'' என நட்பு நாடுகளை நேட்டோ அமைப்பு தலைவர் மார்க் ரூட் எச்சரித்துள்ளார்.
பெர்லின்: ரஷ்யா-உக்ரைன் போரால் ஐரோப்பாவில் மீண்டும் போர் நிழல் விழுந்துள்ளது. இதற்கு நேட்டோ (நார்த் அட்லான்டிக் ட்ரீட்டி ஆர்கனைசேஷன்) என்ற ராணுவ கூட்டமைப்பின் புதிய தலைவர் மார்க் ரூட், "ரஷ்யாவின் அடுத்த இலக்கு நாங்கள்தான். 5 ஆண்டுகளுக்குள் நேட்டோவுக்கு எதிராக ராணுவ சக்தியை பயன்படுத்த ரஷ்யா தயாராகிவிடும்" என்று கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐரோப்பிய நாடுகள் தங்கள் பாதுகாப்பு செலவுகளை உடனடியாக அதிகரிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
டிசம்பர் 11 அன்று பெர்லினில் நடந்த மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் பேசிய மார்க் ரூட், "மோதல் நம் வாசலில் உள்ளது. ரஷ்யா ஐரோப்பாவில் போரை மீண்டும் கொண்டு வந்துள்ளது. நாம் தயாராக இருக்க வேண்டும். ரஷ்யாவின் அடுத்த இலக்கு நாங்கள்தான். நமது கூட்டாளிகளில் பலர் அமைதியாக மெத்தனமாக இருக்கிறார்கள். இதில் உள்ள அவசரத்தை உணரவில்லை. பலர் காலம் நம் பக்கம் இருக்கிறது என்று நம்புகிறார்கள். அது இல்லை" என்று கூறினார்.
டிசம்பர் 11 அன்று பெர்லினில் நடந்த மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் பேசிய மார்க் ரூட், "மோதல் நம் வாசலில் உள்ளது. ரஷ்யா ஐரோப்பாவில் போரை மீண்டும் கொண்டு வந்துள்ளது. நாம் தயாராக இருக்க வேண்டும். ரஷ்யாவின் அடுத்த இலக்கு நாங்கள்தான். நமது கூட்டாளிகளில் பலர் அமைதியாக மெத்தனமாக இருக்கிறார்கள். இதில் உள்ள அவசரத்தை உணரவில்லை. பலர் காலம் நம் பக்கம் இருக்கிறது என்று நம்புகிறார்கள். அது இல்லை" என்று கூறினார்.
இதையும் படிங்க: பெண்களுக்கு ஹேப்பி நியூஸ்... மகளிர் உரிமை தொகை..! வரவு வைக்கும் பணி தீவிரம்...!
நேட்டோ கூட்டமைப்பில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த 32 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதில் 30 நாடுகள் ஐரோப்பா கண்டத்தில் உள்ளன. ஏற்கனவே 2022-ல் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி போரைத் தொடங்கியுள்ளது. இந்தப் போர் மூன்று ஆண்டுகளாக நீடித்து, லட்சக்கணக்கான உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா இப்போது ஐரோப்பிய நாடுகளின் வான்வெளியில் ட்ரோன் தாக்குதல்கள் மற்றும் ரகசிய நடவடிக்கைகளை அதிகரித்து வருகிறது.
மார்க் ரூட், ஜூன் மாதத்தில் நேட்டோ உறுப்பினர்கள் 2035-க்குள் தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதத்தை பாதுகாப்புக்கு ஒதுக்கும் என்பதை உறுதியாக்கியதை வரவேற்றார். இது தற்போதைய 2 சதவீத இலக்கை இரட்டிப்பாக்கும் ஒன்று. ஆனால், "இப்போது போர்கால மனநிலைக்கு மாற வேண்டும். ரஷ்யாவின் பொருளாதாரம் முழுவதும் போருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது" என்று அவர் சூசகமாக எச்சரித்தார்.
இந்த எச்சரிக்கை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரஷ்யா-உக்ரைன் அமைதிப் பேச்சுகளைத் தொடங்கிய சூழலில் வந்துள்ளது. ரூட், டிரம்பைப் பாராட்டி, "அவர் புடினுடன் ஊழலை உடைக்கும் ஒரே நபர்" என்று கூறினார். ஆனால், உக்ரைனுக்கு வலுவான பாதுகாப்பு உத்தரவாதங்கள் தேவை என்று வலியுறுத்தினார். ரஷ்யா சீனாவின் உதவியுடன் போரைத் தொடர்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த எச்சரிக்கை ஐரோப்பிய நாடுகளில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் போன்ற நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத உதவியை அதிகரிக்க முடிவு செய்துள்ளன. ரஷ்யா இதை மறுத்து, "நாங்கள் ஐரோப்பா அல்லது நேட்டோவுக்கு எதிராக தாக்குதல் திட்டமிடவில்லை" என்று தெரிவித்துள்ளது. ஆனால், நிபுணர்கள் ரூட்டின் எச்சரிக்கையை "உண்மையான அச்சுறுத்தல்" என்று கருதுகின்றனர். இது உலக அமைதிக்கு புதிய சவாலாக மாறலாம்.
இதையும் படிங்க: பாகிஸ்தானை சுளுக்கெடுத்த ரபேல் விமானி ஷிவாங்கி! இந்திய விமானப்படையில் புதிய பொறுப்பு!!