நேபாளத்தில் வெள்ளத்துக்குப் பிறகு வரும் பேராபத்து? காலரா, தட்டம்மை அச்சம்! பீதியில் உறைந்த மக்கள்!
வெள்ளம் ஏற்படுத்திய அழிவைத் தொடர்ந்து நேபாளத்தில் மற்றொரு சுகாதார அச்சுறுத்தல் உருவாகியுள்ளது. வெள்ளம் அதிகம் பாதித்த பகுதிகளில் குடிநீர் மாசுபட்டுள்ளதால் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
நேபாளத்தில் கடந்த சில நாட்களாக பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,344 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 4,800-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களைத் தேடும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சமும் நிலவி வருகிறது.
திபெத்–நேபாள எல்லைப் பகுதியில் ஏற்பட்டதாக கூறப்படும் பெரும் பனிப்பாறைச் சரிவைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி லெண்டே ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளம் பின்னர் நேபாளத்தின் போடே கோஷி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல அடி உயரத்துக்கு சகதியுடன் சீறிப்பாய்ந்த வெள்ளநீர், ஆற்றின் கரையோரப் பகுதிகளில் கடுமையான அழிவை ஏற்படுத்தியுள்ளது. ஏராளமான வீடுகள், கட்டடங்கள், வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. பாலங்கள், சாலைகள் உள்ளிட்ட போக்குவரத்து உள்கட்டமைப்புகளும் சேதமடைந்துள்ளன. நீர்மின் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய கட்டமைப்புகளும் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: நேபாள வெள்ளத்திலும் அசையாத வீடு!! கம்பீரமாய் நிற்க இதுவே காரணம்! உரிமையாளர் பகிர்ந்த தகவல்!
இதற்கிடையே, வெள்ளம் ஏற்படுத்திய அழிவைத் தொடர்ந்து நேபாளத்தில் மற்றொரு சுகாதார அச்சுறுத்தல் உருவாகியுள்ளது. வெள்ளம் அதிகம் பாதித்த பகுதிகளில் குடிநீர் மாசுபட்டுள்ளதால் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
குறிப்பாக பிதூர் பகுதியில் குடிநீருக்காக பயன்படுத்தப்படும் 15 நீர்நிலைகள் பாக்டீரியா பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது கண்டறியப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் பொதுமக்களின் சுகாதாரம் குறித்து அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து சுமார் ஒரு லட்சம் பேருக்கு காலரா தடுப்பூசியும், 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசியும் வழங்குவது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். வெள்ளத்துக்குப் பிறகு தொற்றுநோய்கள் மட்டுமின்றி, தொற்றாத நோய்கள் மற்றும் பூச்சிகளால் பரவும் நோய்களின் அபாயமும் அதிகரிக்கலாம் என பொது சுகாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
ஒருபுறம் காணாமல் போனவர்களைத் தேடும் மீட்புப் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மறுபுறம் குடிநீர் மாசுபாடு மற்றும் நோய் பரவும் அபாயம் நேபாளத்திற்கு புதிய சவாலாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: நேபாளத்தில் இருந்து அடித்து வரப்பட்ட 5 உடல்கள்! கண்டக் ஆற்றில் கரை ஒதுங்கியதால் அதிர்ச்சி! இந்திய எல்லையில் சோகக் காட்சி!