வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

முடிக்கற வரை நிறுத்த கூடாது..! ஜெயிலர் ரஜினி அதிரடி..!

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

காஷ்மீரின் பஹல்காமில் 27 அப்பாவி உயிர்களைப் பறித்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பதிலடியாகப் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. ராஜதந்திர உறவுகள் ரீதியில் பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வந்த இந்தியா இன்று, பாகிஸ்தானுக்குள் 4 இலக்குகளையும் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 5 பயங்கரவாதிகளின் முகாம்களை குறிவைத்து தாக்கி அழித்துள்ளது. 

ஆபரேஷன் சிந்தூர் எனும் துல்லிய தாக்குதலில், பாகிஸ்தானில் ஒன்பது இலக்குகள் குறிவைத்து தாக்கப்பட்டதாக இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய பயங்கரவாத அமைப்புகளின் கோட்டைகளை குறிவைத்தது இந்தியா தாக்கியுள்ளது. 

இதையும் படிங்க: “ஆபரேஷன் சிந்தூர்”: ரவுண்ட் கட்டிய இந்தியா.. சுக்குநூறான 9 இடங்கள்.. திணறும் பாக்.,!

பஹல்காம் தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் மூலமாக இந்திய ராணுவம் பதிலடி கொடுத்துள்ள நிலையில்,  12 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் 60 பேர் காயம்டைந்ததாகவும் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்திருக்கிறது. கோட்லி, பகவல்பூர் முசாபராபாத் ஆகிய இடங்களில் இந்தியா ஏவுகனை தாக்குதல்களை நடத்தியது. அதேபோல பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முசாபராபாத் நகரை சுற்றியுள்ள மலைகளுக்கு அருகில் உள்ள பகுதியில் நள்ளிரவுக்கு பிறகு பலத்த வெடி சப்தங்கள் கேட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதை போர் நடவடிக்கையாகவே கருதுகிறோம் என்று பாகிஸ்தான் பிரதமர் அறிவித்திருக்கிறார். 

இந்தியாவின் இந்த அதிரடி தாக்குதலை அரசியல் கட்சி தலைவர்கள், விளையாட்டு மற்றும் திரைத்துறை பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். இதுகுறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள ரஜினிகாந்த், “ஒரு போராளியின் போர் தொடங்கி விட்டது. இலக்கை அடையும் வரை நிறுத்தப்போவதில்லை. ஒட்டுமொத்த தேசமும் பிரதமர் மோடியுடன் நிற்கிறது” என வரவேற்றுள்ளார். 

இதையும் படிங்க: இந்தியாவின் அதிரடி அட்டாக்.. உ.பி.க்கு பறந்த ரெட் அலர்ட்..! டிஜிபி கொடுத்த அட்வைஸ்..!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी